கல்லூரி மொட்டை மாடியில் மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்...!! போலீஸ் விசாரணையிலும் விலகாத மர்மம்..!!

Published : Nov 14, 2019, 04:24 PM IST
கல்லூரி மொட்டை மாடியில் மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்...!! போலீஸ் விசாரணையிலும் விலகாத மர்மம்..!!

சுருக்கம்

கல்லூரியின் இரண்டாம் மாடியில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணபிரியா நேற்று மாலை திடீரென கல்லூரி வளாகத்தில் ரத்தவெள்ளத்தில் விழுந்து கிடந்தார்,  ரத்த வெள்ளத்தில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  

செங்கல்பட்டு  அடுத்துள்ள தனியார் மகளிர் கல்லூரியில்  மாணவி ஒருவர் கல்லூரி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பளம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .  இது கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  செங்கல்பட்டு அடுதுள்ள  இருகுன்றைபள்ளி எனும் பகுதியில் தனியார் பெண்கள்  கல்லூரி ஒன்று உள்ளது. அங்கு விழுப்புரம் மாவட்டம் வலையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா பிரியா என்ற மாணவி மூன்றாம் ஆண்டு கணிதம் பிஎஸ்சி படித்து வந்தார். 

மாணவி வீட்டில் இருந்து அன்றாடம் கல்லூரிக்கு சென்று வர இயலாததால்,   கல்பாக்கத்தில் உள்ள தனது  சகோதரியின் வீட்டில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார் .  இந்நிலையில் கிருஷ்ணபிரியா நேற்று கல்லூரிக்கு சென்றுள்ளார்.  கல்லூரியின் இரண்டாம் மாடியில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணபிரியா நேற்று மாலை திடீரென கல்லூரி வளாகத்தில் ரத்தவெள்ளத்தில் விழுந்து கிடந்தார்,  ரத்த வெள்ளத்தில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு  வந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் இந்நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  

ருஷ்ணபிரியா கட்டடத்திலிருந்து தானே விழுந்தாரா.? அல்லது வேறு யாராவது அவரை தள்ளி விட்டார்கள் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரின் மரணச் செய்தியைக் கேட்டு  அங்கு வந்த  உறவினர்கள், மாணவியின் மரணத்தில் ஏதோ மர்மம் உள்ளது எனக்கூறி வருகின்றனர்,  கல்லூரி வளாகத்தில் மாணவி மர்மமான முறையில் விழுந்துகிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!