கல்லூரி மாணவி பரிதாப பலி... சித்த வைத்தியரின் தவறான சிகிச்சையால் நடந்த கொடுமை!!

By sathish kFirst Published Jun 17, 2019, 2:12 PM IST
Highlights

சித்த வைத்திய சாலையில், சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி, தவறான சிகிச்சை அளித்ததால் உயிரழந்ததாக குற்றம்சாட்டி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர் புதூர் பகுதியை சேர்ந்த கணேசன் - மல்லிகா தம்பதியின் மகள் சத்தியப்பிரியா. கோவை அரசுக் கலைக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்த சத்தியப்பிரியாவுக்கு, கடந்த சில மாதங்களாக மாதவிடாய்க் கோளாறு இருந்துள்ளது. இதற்காக பல்வேறு டாக்டர்களிடம் சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

ஆனால், அவருக்கு இங்கிலீஷ் சிகிகிச்சை பலனளிக்காத நிலையில் கடந்த ஜனவரி முதல், கோவை செல்வபுரத்தில் சித்த மருத்துவர் குருநாதன் என்பவர் நடத்திவந்த மனோன்மணி சித்த வைத்திய சாலையில் அந்த மாணவி சிகிச்சைக்காக சென்றுள்ளார். தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்ட நிலையில்,  சிகிச்சையால் குணமடைவதற்கு பதிலாக, மாணவி சத்தியப்பிரியாவுக்கு நோய் இன்னும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே வைத்தியர் குருநாதன் தவறான சிகிச்சை அளித்ததாலேயே, மாணவியின் உடல் நிலை மோசமானதாகக் கூறி, அவரது பெற்றோர் நேற்று செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  

இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மாணவியின் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் தவறான சிகிச்சை அளித்த சித்த மருத்துவரை கைது செய்ய வேண்டும் என்றும், அவர் மீது அளிக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்காத செல்வபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோஷம் போட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சித்த மருத்துவரிடம் விசாரணை நடத்தினர் . அப்போது மாணவிக்கு அவர் அளித்த மருந்துகளை ஆய்வுக்கு அனுப்பி இருப்பதாகவும், ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் சித்த மருத்துவர் மீதும், மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின்னரே மாணவியை உடலை பெற்றுக்கொண்டனர் .  

click me!