சிறுமியை மிரட்டி கதற கதற பலாத்காரம்... திருமணம் நிச்சயிக்கப்பட்ட காமக்கொடூரன் கைது..!

Published : Apr 27, 2021, 03:39 PM IST
சிறுமியை மிரட்டி கதற கதற பலாத்காரம்... திருமணம் நிச்சயிக்கப்பட்ட காமக்கொடூரன் கைது..!

சுருக்கம்

தாய் விபத்தில் அடிக்கட்டுவிட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் எனக்கூறி சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தாய் விபத்தில் அடிக்கட்டுவிட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் எனக்கூறி சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சேலம் மாவட்டம் மெய்யனூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி. இவர் 8ம் வகுப்பு படித்து வருகிறாள். பள்ளி விடுமுறை காரணமாக வீட்டில் இருக்கிறாள். இந்நிலையில், கடந்த 24ம் தேதி இரவு சிறுமி வீட்டின் வெளியே நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதே பகுதியில் உள்ள பக்கத்து தெருவை சேர்ந்த பெயிண்டரான சந்தோஷ்குமார்(30) சிறுமியிடம் உனது தாய் விபத்தில் அடிக்கட்டுவிட்டார் வா போகலாம் எனக்கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். 

பின்னர், சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து, சிறுமி வீட்டிற்கு சென்று நடந்தவற்றை கூறி தாயிடம் கதறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த  சிறுமியின் தாயார் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தோஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். 

அதில், சிறுமியை ஏமாற்றி வீட்டிற்கு அழைத்துச் சென்று மிரட்டி பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். ,இதனையடுத்து, அவரை போக்சோவில்  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சந்தோஷ்குமாருக்கு அடுத்த மாதம் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி