தாலி கட்டிய புருஷனை விட்டுட்டு கள்ளக்காதலனை நம்பி போன கடைசியில் இதுதான் கதி..!

By vinoth kumarFirst Published Apr 27, 2021, 2:22 PM IST
Highlights

திருமணம் செய்துகொள்ளுமாறு கள்ளக்காதலனை மிரட்டிய இளம்பெண்ணை  கொடூரமாக கொலை செய்யப்பட்டு 8 மாதங்களுக்குப் பின்பு எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் செய்துகொள்ளுமாறு கள்ளக்காதலனை மிரட்டிய இளம்பெண்ணை  கொடூரமாக கொலை செய்யப்பட்டு 8 மாதங்களுக்குப் பின்பு எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கூத்திப்பாறையை சேர்ந்த லிங்கம் மகள் சத்யபிரியா (21). இவருக்கும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த வசந்தபாண்டி (26) என்பவருக்கும் 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர், சத்யபிரியா பிரசவத்திற்காக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தந்தை ஊரான கூத்திப்பாறைக்கு வந்துள்ளார். குழந்தை பெற்றும் கணவர் வீட்டுக்குச் செல்லாமல் தந்தையுடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், சத்யபிரியாவுக்கும், சாத்தூர் கம்மாச்சூரங்குடியை சேர்ந்த ஞானகுருசாமி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.  இதை தொடர்ந்து சத்திய பிரியா ஞானகுருசாமியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினார். திருமணம் செய்து கொள்ளாவிட்டால் ஞானகுருசாமி பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினாராம்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ம் தேதி வேலைக்கு சென்ற சத்ய பிரியா, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை லிங்கம் மகளை காணவில்லை என அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து, சத்யாப்பிரியாவுடன் செல்போனில் அடிக்கடி பேசியவர்கள் பட்டியலை வைத்து விசாரணை தீவிரப்படுத்தினர். 

அதன்படி சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டி கண்மாய் சூரங்குடியை சேர்ந்த ஞானகுருசாமி(26) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், பல்வேறு திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.  சத்யபிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய காரணத்தால் சாத்தூர் போக்குவரத்து நகர் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ம் தேதி அழைத்து சென்றேன். அங்கு சத்யபிரியாவுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். அதன்பின் சத்யப்பிரியா உடனே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். கொலை செய்துவிட்டு உடலை அங்கேயே விட்டுச் சென்றதாகவும் விசாரணையில் தெரிவித்தார்.

அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் ஞானகுருசாமியை கைது செய்து சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் சத்யபிரியா காணாமல் போனதாக பதியப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அருப்புக்கோட்டை பகுதியில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு 8 மாதங்களுக்குப் பின்பு எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். 

click me!