நெஞ்சை வெடித்து சிதறவைக்கும் கொடூரம்... பிறந்த சில மணி நேரத்திலேயே இரட்டை குழந்தைகளுக்கு ஏற்பட்ட கோர முடிவு...

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 23, 2021, 06:30 PM IST
நெஞ்சை வெடித்து சிதறவைக்கும் கொடூரம்... பிறந்த சில மணி நேரத்திலேயே இரட்டை குழந்தைகளுக்கு ஏற்பட்ட கோர முடிவு...

சுருக்கம்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதி மக்களிடம் தீவிர விசாரணை நடத்தி, இரட்டை சிசுக்கள் புதைக்கப்பட்ட இடத்தையும் கண்டறிந்தனர். 

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆதனக்குறிச்சி கிராமத்தில் தனியார் சிமெண்ட் ஆலை ஒன்று உள்ளது. அந்த ஆலையின் சுரங்க பகுதியில் குறை பிரசவத்தில் பிறந்த ஆண், பெண் என இரட்டை சிசுக்கள் சடலமாக கிடப்பதைக் கண்ட அப்பகுதி மகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கிராமத்தைச் சேர்ந்த சிலர் அந்த குழந்தைகளின் சடலத்தை அங்கேயே குழி தோண்டி புதைத்தனர். 

இரட்டை குழந்தைகளை மண்ணில் போட்டு புதைக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவியது. இந்த சம்பவம் குறித்து ஆதனக்குறிச்சி  கிராம நிர்வாக அலுவலர் தளவாய் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதி மக்களிடம் தீவிர விசாரணை நடத்தி, இரட்டை சிசுக்கள் புதைக்கப்பட்ட இடத்தையும் கண்டறிந்தனர். 

அதன் பின்னர் செந்துறை வட்டாச்சியர் குமரையா முன்னிலையில் புதைக்கப்பட்ட சிசுக்களின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறந்து சில மணி நேரங்கள் கூட ஆகாத இரட்டை சிசுக்களை இப்படி வீசி விட்டுச் சென்றது யார்?, தகாத உறவில் பிறந்த குழந்தைகள் என்பதால் ரகசியமாக கருக்கலைப்பு செய்து குழந்தைகளின் சடலத்தை வீசிச்சென்றனரா? என பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!