பள்ளியில் வைத்து பள்ளி மாணவி கதற கதற பலாத்காரம்... ஆசிரியரை வீடு புகுந்துஅலேக்கா தூக்கிய போலீஸ்..!

Published : Apr 23, 2021, 05:51 PM ISTUpdated : Apr 23, 2021, 06:07 PM IST
பள்ளியில் வைத்து பள்ளி மாணவி கதற கதற பலாத்காரம்... ஆசிரியரை வீடு புகுந்துஅலேக்கா தூக்கிய போலீஸ்..!

சுருக்கம்

அரசு பள்ளியில் வைத்து பள்ளி மாணவியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்த ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

அரசு பள்ளியில் வைத்து பள்ளி மாணவியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்த ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே இண்டூர் கிராமத்தை சேர்ந்த 14 வயது மாணவி, இவர்  கூலிக்கொட்டாயில்  உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது, கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பயிற்சி புத்தகம் வாங்குவதற்காக நேற்று முன்தினம் பள்ளிக்கு மாணவி சென்றுள்ளார். அப்போது, அதே பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் மல்லியம்பட்டியை சேர்ந்த கோவிந்தன் (43) என்பவர் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கதறியபடி கூறியுள்ளார். இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் கோவிந்தனை நேற்று போக்சோசட்டத்தில்  கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவியை ஆசிரியர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி