6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொடூர கொலை... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

Published : Dec 27, 2019, 12:00 PM IST
6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொடூர கொலை... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

சுருக்கம்

கோவை அடுத்த பன்னிமடை கஸ்தூரிநாயக்கன்புதூரில் கடந்த மார்ச் 25-ம் தேதி 6 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனை அறிக்கையில்  சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவையில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து  கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் சந்தோஷ் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கோவை அடுத்த பன்னிமடை கஸ்தூரிநாயக்கன்புதூரில் கடந்த மார்ச் 25-ம் தேதி 6 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனை அறிக்கையில்  சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷ்குமார் மீதான குற்றம் தெள்ளத்தெளிவாக நிரூபணமானதால் அவர் குற்றவாளி என மகளிர் நீதிமன்ற நீதிபதி ராதிகா தீர்ப்பு வழங்கியுள்ளார். அவருக்கான தண்டனை விவரம் இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

இதனிடையே, இந்த வழக்கில் சிறுமியை மேலும் ஒருவர் வன்கொடுமை செய்தது டிஎன்ஏ சோதனையில் தெரியவந்துள்ளதாக, சிறுமியின் தாயார் புகார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

20 தூக்க மாத்திரைகள்.. துடிதுடித்த கணவர்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி விடிய விடிய!
பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்.. கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.. கள்ளக்காதலன் எஸ்கேப்..