ஆசை வார்த்தை கூறி ஆசை தீர சிறுமியுடன் உல்லாசம்.. 3வது முறையாக வீட்டை விட்டு வெளியேறி ஆட்டோ டிரைவருடன் எஸ்கேப்.

Published : Dec 16, 2021, 03:08 PM IST
ஆசை வார்த்தை கூறி ஆசை தீர சிறுமியுடன் உல்லாசம்.. 3வது முறையாக வீட்டை விட்டு வெளியேறி ஆட்டோ டிரைவருடன் எஸ்கேப்.

சுருக்கம்

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 38வது பிளாக்கை சேர்ந்தவர் அற்புதராஜ் (24). ஆட்டோ டிரைவர். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியுடன் ஆட்டோவில் செல்லும்போது பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 6ம் தேதி அற்புதராஜ் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றார். 

ஆசை வார்த்தை கூறி 3 முறை சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 38வது பிளாக்கை சேர்ந்தவர் அற்புதராஜ் (24). ஆட்டோ டிரைவர். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியுடன் ஆட்டோவில் செல்லும்போது பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 6ம் தேதி அற்புதராஜ் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றார். 

இதனால், பதறிப்போன சிறுமியின் பெற்றோர் எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அற்புதராஜ் செல்போன் எண்ணை டிராக் செய்த போது அவர்கள் பாண்டிச்சேரியில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் பாண்டிச்சேரி சென்று 2 பேரையும் அழைத்து வந்தனர். 

மேலும், விசாரணையில் அற்புதராஜ் சிறுமியை ஏற்கனவே வேளாங்கண்ணிக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது சிறுமியின் பெற்றோர் அவளை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்தனர். பின்னர் சிறுமியை விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தனர்.தொடர்ந்து, அற்புதராஜ் அங்கேயும் சென்று சிறுமியை அழைத்து சென்றுள்ளார். 

அங்குள்ள காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் போலீசார் அவரை கைது செய்து 45 நாள் சிறையில் இருந்துள்ளார். பின்னர் வௌியில் வந்தபோது மீண்டும் 3வது முறையாக சிறுமியை அற்புதராஜ் அழைத்து சென்றது தெரியவந்தது. 17 வயது சிறுமி என்பதால் போக்சோ சட்டத்தில் அற்புதராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!
திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு