குழந்தைகள் ஆபாச வீடியோ... 30 பேருடன் வசமாக சிக்கிய அரசியல் பிரமுகர்..!

By Thiraviaraj RMFirst Published Dec 13, 2019, 1:14 PM IST
Highlights

திருச்சியில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து நண்பர்களுக்கு அனுப்பியதாக கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் அல்போன்ஸுடன் தொடர்பில் இருப்பதாக அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட 30 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தமிழகத்தில் ஆபாச படங்களை டவுன்லோடு செய்து பார்ப்பவர்களின் ஐ.பி. முகவரி தயாராக இருப்பதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ரவி  எச்சரிக்கை விடுத்து இருந்தார். 

இந்நிலையில் திருச்சியில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து நண்பர்களுக்கு அனுப்பிய குற்றத்துக்காக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர்  நேற்று  கைது செய்யப்பட்டார். திருச்சி போலீஸ் கமி‌ஷனர் வரதராஜூ உத்தரவின் பேரில், உதவி கமி‌ஷனர் மணிகண்டன், இன்ஸ்பெக்டர் ஆனந்த வேதவள்ளி ஆகியோர் கிறிஸ்டோபரிடம் தீவிர விசாரணை நடத்தி ஆபாச வீடியோக்களை பறிமுதல் செய்தனர்.

கிறிஸ்டோபரிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் நிலவன், ஆதவன் என்கிற புனை பெயர்களில் முகநூல் கணக்கு தொடங்கி அதில் குழந்தைகள், சிறுமிகளுடன் வன்புணர்வில் ஈடுபடும் காமுகர்களின் ஆயிரக்கணக்கான படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக அவருடன் 150 பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இணையதள நண்பர்கள் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 42 வயதான கிறிஸ்டோபர் இதற்கு அடிமையாக இருந்துள்ளார். குழந்தைகள் வீடியோக்களை பார்த்து பார்த்து மனநோயாளிபோல் மாறியுள்ளார். கிறிஸ்டோபர் திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் சிறுமிகள், குழந்தைகளை ஏமாற்றி வீடியோ பதிவு செய்து அதனை வெளிநாட்டு ஆபாச வெப் சைட்டுகளுக்கு பரப்பி பணம் குவித்தாரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்காக கிறிஸ்டோபரின் செல்போன், மெமரி கார்டுகள் சென்னையில் உள்ள தடயவியல் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிக்கை கிடைக்க பெற்றதும் இது தொடர்பான விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்படும். கிறிஸ்டோபரின் 150 நண்பர்களின் பட்டியலை திரட்டி திருச்சி, சென்னை, செங்கல்பட்டு, கோவை ஆகிய 4 மாவட்ட போலீசாருக்கு திருச்சி போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இந்த 4 மாவட்டங்களில் உள்ள கிறிஸ்டோபரின் நண்பர்களிடமும் விசாரணை நடக்கிறது.

திருச்சியில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் நண்பர்கள் உள்பட 30 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கிறிஸ்டோபருடன் தொடர்பில் இருந்த நண்பர்கள் பலர் தங்களது செல்போனை சுவிட்ச்ஆப் செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர். டிப்ளமோ படித்து விட்டு திருச்சி, நாகர்கோவில் உள்பட பல இடங்களில் வேலைபார்த்துள்ள கிறிஸ்டோபர் அரசியல் கட்சியிலும் இருந்துள்ளார். அப்போது பல்வேறு கட்சி பிரமுர்களுடன் நெருங்கி பழகியுள்ளார். கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டுள்ளது முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் மத்தியில் அதிர்ச்சி கலந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்டோபர் நாம் தமிழர் கட்சியில் இருந்தவர். 

திருமணமாகி 10 வருடமாகியும் கிறிஸ்டோபருக்கு குழந்தை இல்லை. இதன் பிறகுதான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டதும் அவரது மனைவி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். 

click me!