இரண்டரை வயது சிறுமி கொடூர கொலை... தாய்மாமன் பரபரப்பு வாக்குமூலம்..!

Published : Jun 27, 2019, 11:03 AM IST
இரண்டரை வயது சிறுமி கொடூர கொலை... தாய்மாமன் பரபரப்பு வாக்குமூலம்..!

சுருக்கம்

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது குழந்தை அழுததால் கிணற்றில் வீசி கொன்றதாக தாய்மாமன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது குழந்தை அழுததால் கிணற்றில் வீசி கொன்றதாக தாய்மாமன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.  

கோவை அன்னூர் அருகே அக்கரைசெங்கப்பள்ளியை சேர்ந்தவர் கனகராஜ் (28). இவரது மனைவி காஞ்சனா (23). இவர்களுக்கு இரண்டரை வயதில் அரும்பதா என்ற குழந்தை இருந்தது. இவர்கள் பீளமேடு விளாங்குறிச்சி ரோட்டில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன் கனகராஜ் தனது பெற்றோரை பார்க்க சென்றுவிட்டார். 

அன்று இரவு காஞ்சனா குழந்தையுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை திடீரென குழந்தை காணவில்லை. இந்நிலையில், பாழடைந்த கிணற்றில்  குழந்தை அரும்பதாவின் சடலம் கிடந்ததை கண்டு தாய் அதிர்ச்சியடைந்தார். பின்னர், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, கிணறு அருகில் காலி மது பாட்டில் கிடந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, உறவினர் ஒருவர் தான் கொலையாளியாக இருக்க முடியும் என போலீசார் சநதேகித்தனர்.  அப்போது ரகுநாதனுக்கு  மதுகுடிக்கும் பழக்கம் இருப்பது தெரியவந்தது. தீவிர விசாரணையில்,  குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததை ரகுநாதன் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

 

இதனையடுத்து ரகுநாதன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், நான் டிப்ளமோ படித்துள்ளேன். 10  மாடுகளை வைத்து பாலை கறந்து வீடு வீடாக விற்பனை செய்து வருகிறார். எனக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, வீட்டுக்கு அருகில் உள்ள பழனியப்பன் தோட்டத்தில் உள்ள  கிணற்று மேட்டில் அமர்ந்து மது குடித்தேன். எனக்கு குழந்தை பார்த்ததும் எனக்கு சபல புத்தி ஏற்பட்டது. யாருக்கும் தெரியாமல் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்வதற்காக கிணற்று மேட்டுக்கு தூக்கி சென்றேன். 

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது குழந்தை தொடர்ந்து அழுகையை நிறுத்தாமல் இருந்ததால் குழந்தையை உயிருடன்  கிணற்றில் தூக்கி வீசி விட்டு ஒன்றும் தெரியாதது போல் படுத்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார். கிணற்று மேட்டில் நான் குடித்து விட்டு போட்ட மது பாட்டில் என்னை காட்டிக்  கொடுத்து விட்டது. இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். 

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்