பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த நபர் மாணவர்களை மசாஜ் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி வந்துள்ளார். ஆனால், இதற்கு மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களை மசாஜ் செய்ய கட்டாயப்படுத்திய ஆசிரியர் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தை அடுத்துள்ள சந்த்ரிமுண்டா கிராமத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த நபர் மாணவர்களை மசாஜ் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி வந்துள்ளார். ஆனால், இதற்கு மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியர் மாணவர்களை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோரிடம் மாணவர்கள் கூறியதை அடுத்து காவல் நிலையத்திலும், மாவட்ட கல்வி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இதனையடுத்து ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாவட்ட கல்வி அதிகாரி (DEO) தெரிவித்தார்.