இன்னொருத்தியை வச்சு இருக்கியா..கணவனையும், கள்ளகாதலியையும் நிர்வாணமாக ஊர்வலம் கூட்டி சென்ற சம்பவம்

Published : Jun 15, 2022, 05:04 PM IST
இன்னொருத்தியை வச்சு இருக்கியா..கணவனையும், கள்ளகாதலியையும் நிர்வாணமாக ஊர்வலம் கூட்டி சென்ற சம்பவம்

சுருக்கம்

Viral Video :மற்றொரு பெண்ணுடன் உறவில் இருந்த கணவனையும், அவரது கள்ளகாதலியையும் அரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக மனைவி அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உரிபேண்டா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பழங்குடி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஃபர்சகான் பகுதியில் உள்ள பட்காய் என்ற கிராமத்தில் பெண்ணுக்கும் தன் கணவனுக்கும் இடையே திருமணத்தை மீறிய பந்தம் இருப்பதை கேள்விபட்டு உள்ளார். அவரது கணவனின் நடவடிக்கைகளும் அதனை உறுதி செய்துள்ளது. இதனால் கடந்த 11ம் தேதி அன்று அங்கு ரகசியமாக சென்று சோதனை செய்துள்ளார்.

இதையும் படிங்க : அண்ணாமலை பொதுவெளியில் பேச கூடாது.. ஐஜிக்கு பறந்த புகார் - விரைவில் கைதாகிறாரா அண்ணாமலை ?

அப்போது அவர்கள் இருவரும் தனிமையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த அந்த மனைவி அவர்களை கையும் களவுமாக பிடித்து கடுமையாக தாக்கியுள்ளார். அதோடு அவர்களை அரை நிர்வாணமாக்கி தெருவெங்கும் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளார். இதனை அக்கிராமத்தினர் வேடிக்கை பார்த்ததோடு சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்திலும் பரப்பியிருக்கிறார்கள்.

அது தொடர்பான வீடியோ வைரலானதை அறிந்த கொண்டேகன் மாவட்ட எஸ்.பி., திவ்யாங் படேல் காவல்நிலைய குழுவை அனுப்பி வைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறார். அதன் பேரில் சம்பவம் நடந்ததை உறுதிசெய்த போலிஸார் கணவனையும், அவரது காதலியையும் தாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக மனைவி உட்பட நால்வரையும் கைது செய்து அவர்கள் மீது 354, 354 B, 509 A,B வழக்குப்பதிந்திருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதையும் படிங்க : மேலிடத்தில் இருந்து வந்த அதிரடி உத்தரவு..டெல்லிக்கு பறக்கும் ஆளுநர் - பின்னணி காரணம் இதுவா ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!
திமுக முக்கிய தலைவர் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இவர்கள் தான்! எவ்வளவு சவரன் நகை? வெளியான அதிர்ச்சி தகவல்!