ஒன்றாக சேர்ந்து சாகலாம் என்று சொல்லி காதலியை சாகடித்த காதலன்... பாதி உயிருடன் துடித்துக் கொண்டிருந்த போது கழுத்தையும் இறுக்கி கொன்ற கொடூரம்!!

Published : Jul 12, 2019, 11:01 AM IST
ஒன்றாக சேர்ந்து சாகலாம் என்று சொல்லி காதலியை சாகடித்த காதலன்... பாதி உயிருடன் துடித்துக் கொண்டிருந்த போது கழுத்தையும் இறுக்கி கொன்ற கொடூரம்!!

சுருக்கம்

காதலியுடன் ஒன்றாக சேர்ந்து சாகலாம் என்றுதான் தற்கொலைக்கு போன காதலன் சுமர் சிங் , திடீரென காதலியை சயனைடு விஷத்தை கொடுத்து, துப்பட்டாவால் கழுத்தையும் இறுக்கி கொலை செய்துவிட்டு எஸ்கேப் ஆனால் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

காதலியுடன் ஒன்றாக சேர்ந்து சாகலாம் என்றுதான் தற்கொலைக்கு போன காதலன் சுமர் சிங் , திடீரென காதலியை சயனைடு விஷத்தை கொடுத்து, துப்பட்டாவால் கழுத்தையும் இறுக்கி கொலை செய்துவிட்டு எஸ்கேப் ஆனால் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த சுமர் சிங் காஜல்  3 வருட காதலர்கள். வழக்கம்போல் மற்ற காதலர்களுக்கு வரும் பிரச்சனைதான் அதாவது இவர்களது காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு. அதோடு வேறொரு மாப்பிள்ளையை பார்த்து நிச்சயதார்த்தமும் செய்து விட்டனர். ஆனால் காஜலுக்கு  மாப்பிள்ளையை பிடிக்கவில்லை, தனது காதலனை மறக்கவும் முடியாமல் மனக்கஷ்டத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் 10ஆம் தேதி, திருவல்லிக்கேணி மியான் சாகிப் தெருவில் உள்ள எம்டிசி லாட்ஜில் இவர்கள் இருவரும் ஜோடியாக ரூம் போட்டு தங்கி உள்ளனர். ஆனால் மறுநாள் வரை ஜோடி ரூமை விட்டு வெளியே வரவே இல்லை என அந்த லாட்ஜில் ரூம் க்ளீன் செய்யும் வேலையாட்கள் சொன்னதால் அதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தால், காஜல் பிணமாக கிடக்கிறார். உயிருக்கு போராடிய சுமர்சிங்கை சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

இதனையடுத்து விசாரணையை தொடங்கியதில்; அந்த ரூமில், ஒரு கூல் டிரிங்ஸ் பாட்டில் இருந்தது. அதில் விஷம் கலந்தி இருவரும் தற்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இருவரது காதல் விவரங்களையும் சேகரித்த போலீசார், விசாரணையை ஆரம்பித்தனர்.  அப்போது வந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை பார்த்த போலீசார் அதிர்ந்து போய்விட்டனர்.  காஜல் சயனைடு சாப்பிட்டுள்ளதும், கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

போலீசாரின் கவனம் சிகிச்சையில் இருந்த சுமர் சிங்கிடம் இதை பற்றி போலீசார் விசாரித்தனர். 

அவரிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக சொல்லவே, போலீசாரின் ஸ்டைலில் விசாரித்ததில்; "காஜலுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துவிட்டார்கள். அவளுக்கு என்னை மறக்க முடியவில்லை. அதனால் நாம் காதலனுடன் ஒன்றாக வாழ முடியவில்லை, ஒன்றாக சாகவாவது செய்யலாம் என்று நினைத்திருந்தால். அவள் விருப்பத்தை என்னிடம் சொன்னாள். ஆனால், எனக்கு உடன்பாடில்லை.

தற்கொலையில் விருப்பமில்லாத என்னை பலமுறை வற்புறுத்தினாள். அதனால் தான் நானும் ஒப்புக் கொண்டேன். எதை சாப்பிட்டால் உடனே உயிர் போகும் என்று நெட்டில் தேடி பார்த்தேன். அதன்படி சயனைட் வாங்கி வைத்து கொண்டேன். லாட்ஜில் ரூம் எடுத்தோம். கூல்டிரிங்ஸ்-ல் கலந்து குடிப்பதாகதான் பிளான் போட்டு. ஆனால் எனக்கு கடைசி நேரத்தில் மனசு மாறிவிட்டது. அதனால் ஜூஸில் சயனைடு கலந்து அவளுக்கு கொடுத்தேன், நானும் குடிப்பது போல நடித்தேன். ஆனால் காஜல் இதை  கண்டுபிடித்து என்னிடம் கேட்டுவிட்டாள். பாதி உயிருடன் துடித்துக்கொண்டிருந்த அவள் உயிருடன் பிழைத்தால், திரும்பவும் என்னை சாக சொல்வாளே என்று பயந்து போய் துப்பாட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டேன் என்றார். 

PREV
click me!

Recommended Stories

ஏசி வாங்கி தராத காதல் கணவர்.! உயிரை மாய்துகொண்ட 25 வயது இளம்பெண்.! திருவள்ளூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
அப்பா.. என்னை காப்பாத்து.. தந்தையிடம் கதறிய 33 வயது சத்யா.. வெறியாட்டம் ஆடிய சக்திவேல்.. யார் இவர்?