13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம்.. நாள் ஒன்றுக்கு 5 முதல் 8 பேர்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

By vinoth kumarFirst Published Nov 29, 2020, 5:28 PM IST
Highlights

சென்னையில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், நெஞ்சை உலுக்கும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. 

சென்னையில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், நெஞ்சை உலுக்கும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.  13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. 

கடந்த 23ம் தேதி, சென்னை தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் பாலியல் தொழில் நடப்பதாக புகார் வந்தது. இதனையடுத்து, இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 8 பேரை கைது செய்தார். அவர்கள் இதையே தொழிலாக செய்து வருவதும் விசாரணையில் உறுதியானது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில், மதன்குமார், ஷாகிதா பானு, செல்வி, சந்தியா ஆகிய 4 பேர் சேர்ந்து சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது உறுதியானது. 

இதில் மகேஷ்வரி (எ) மகா, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகிய 4 பேர் புரோக்கர்களாக செயல்பட்டதும் உறுதியானது. இவர்கள் தான், வாடிக்கையாளர்களை அறிமுகம் செய்து வைத்து வந்திருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட மதன்குமார், ஷாகிதா பானு, சந்தியா, மகேஷ்வரி, வனிதா, விஜயா ஆகிய 6 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது முத்துப்பாண்டி, அன்சாரி பாஷா, அனிதா, மீனா, கார்த்திக், முஸ்தபா ஆகியோரும் புரோக்கர்களாக செயல்பட்டதை தெரிவித்தனர்.. இதைதயடுத்து அவர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

புரோக்கர் சந்தியாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வடசென்னை வடக்கு மாவட்ட பாஜவின் செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் (44) என்பவர் 13 வயது சிறுமி மற்றும் பல இளம்பெண்களை போலீஸ் அதிகாரிகளுக்கு தேவை என்று அழைத்துச் செல்வார் என்று கூறியதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து, பாஜவை சேர்ந்த தொழிலதிபர் ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், எண்ணூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக உள்ள சி.புகழேந்தி என்பவருக்காக பலமுறை சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தியதாக கூறினார்.

இது தொடர்பாக போலீசிடம் ராஜேந்திரன் விசாரணையின் போது கூறுகையில், நானும், இன்ஸ்பெக்டர் புகழேந்தியும் 15 ஆண்டு நண்பர்கள். ரெட்ஹில்ஸ் பகுதியில் பணியாற்றி வந்த அவர் கடந்த ஓராண்டாக எண்ணூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். என்னுடைய அலுவலகத்துக்கு சிறுமியை அழைத்து வருவேன். அங்கு புகழேந்தியும் வருவார். அங்கு வைத்து இருவருமே சிறுமியுடன் உல்லாசமாக இருப்போம் என்றார். இதை தொடர்ந்து, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவுறுத்தலின் பேரில் புகழேந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த எண்ணூர் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் பாஜக நிர்வாகி உள்பட இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும், 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நாள் ஒன்றுக்கு 5 - 8 பேர் வரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.  இந்த விவகாரத்தில் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

click me!