கர்நாடகாவில் மருத்துவமனை ஊழியர் ஒருவர் இறந்த பெண்களின் உடலை புகைப்படம் எடுத்து ரசித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் மருத்துவமனை ஊழியர் ஒருவர் இறந்த பெண்களின் உடலை புகைப்படம் எடுத்து ரசித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் மடிக்கேரி மாவட்ட மருத்துவமனையில் பியூனாகப் பணிபுரிந்து வந்தவர் சையத். இவர் பிணவறையில் இருக்கும் பெண்களின் இறந்த உடலை புகைப்படங்கள் எடுத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எனக்கு நீங்க அப்பா மாதிரி.. ப்ளீஸ் விட்ருங்க! கெஞ்சியும் விடாமல் இளம்பெண்ணை கதறவிட்ட தாயின் கள்ளக்காதலன்.!
கொரோனா காலகட்டத்தில் மருத்துவமனையில் சேர்ந்த சையத், இறந்த பெண்களின் உடல்களை புகைப்படம் எடுத்து ரசிப்பதை அங்கிருந்த மற்ற ஊழியர்கள் கவனித்துள்ளனர். இதுமட்டுமின்றி அந்த மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களை பிணவறைக்கு வரவழைத்து அவர்களிடமும் தவறாக நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த இந்து அமைப்பினர், சையத் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: பாரம்பரிய நெல் ரகங்களை மதிப்பு கூட்டி விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம்! மண் காப்போம் கருத்தரங்கில் ஆலோசனை
இதை அறிந்த சையத், தான் பணியில் இருந்து விலகுவதாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறிவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதனிடையே சையத் மேல் வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், தலைமறைவாக உள்ள சையத்தை தேடி வருகின்றனர். இறந்த பெண்களின் உடலைகளை புகைப்படம் எடுத்து ரசித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.