
தனது அண்ணன் மகள் காதலனுடன் தனிமையில் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த அந்த பெண்ணின் சித்தப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.
நாளுக்கு நாள் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. வீடியோ எடுத்து மிரட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. உறவுகளை மீறி நடக்கும் பாலியல் சம்பவங்கள் அதிர்ச்சியூட்டி வருகிறது. அப்படி தன் அண்ணன் மகளை ஏமாற்றி வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம் செய்து கட்டாய திருமணம் செய்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
பரமக்குடி அருகே உள்ள புத்தனேந்தல் கிராமத்தை சேர்ந்த 25 வயது பட்டதாரி இளம்பெண். இவர் கலையூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பு ராஜாவை காதலித்து வந்துள்ளார். கருப்பு ராஜா திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அந்த பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளை கூறி கருப்புராஜா பலமுறை உடலுறவு கொண்டுள்ளார்.
நாளடைவில் அந்தப் பெண்ணிடம் பேசுவதையும், பழகுவதையும் கருப்பு ராஜா நிறுத்தியுள்ளார். இவர்களின் காதல் அந்தப் பெண்ணின் சித்தப்பா உறவு முறையான கலையூர் கிராமத்தை சேர்ந்த 45 வயதான முனியசாமி என்பவருக்கு தெரிய வந்துள்ளது. கருப்பு ராஜா விலகி இருப்பதால் அந்த பெண்ணிடம் கருப்பு ராஜாவை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என சொல்லி இரவு ஊரின் ஒதுக்குப்புறம் உள்ள ஒரு இடத்திற்கு வரச் சொல்லியுள்ளார். அதனை நம்பி அந்த பெண்ணும், கருப்பு ராஜாவும் நள்ளிரவு 12 மணிக்கு அந்த இடத்திற்கு வந்துள்ளனர். ஆனால், அவர்கள் வருவதை பார்த்ததும் முனியசாமி அருகில் சென்று ஒளிந்து கொண்டார்.
பிரிந்து நீண்ட நாள்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட காதலர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்ததும் மீண்டும் மனம் உருகி பேசி இருவரும் உடலுறவு கொண்டுள்ளனர். அதை மறைந்திருந்த முனியசாமி தனது செல்போனில் வீடியோ படம் எடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த முனியசாமி அவர்களிடம் அவர் எடுத்த வீடியோவை காட்டி மிரட்டியுள்ளார். உடனே முனியசாமி, கருப்பு ராஜாவை வீட்டுக்கு விரட்டியடித்துள்ளார்.
இளம்பெண்ணை மட்டும் இருக்க வைத்து அவரை மிரட்டி அவரும் உடலுறவு கொண்டுள்ளார். இதை வெளியில் சொன்னால் பிரச்சனை பெரிதாகி விடும் என கூறி அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளார். பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன் அந்தப் பெண்ணை முனியசாமி உனக்கும் கருப்பு ராஜாவுக்கும் திருமணம் செய்து வைக்கப் போகிறேன் கண்டிப்பாக வரவேண்டும் என கூறி மதுரைக்கு வரச் சொல்லி இருக்கிறார். அவரது பேச்சை நம்பி அந்த பெண்ணும் மதுரைக்கு சென்றுள்ளார்.
அங்கு முனியசாமி திடீரென தான் மறைத்து வைத்திருந்த தாலியை எடுத்து அந்தப் பெண்ணின் கழுத்தில் கட்டிவிட்டு அவரது செல்போனில் படம்பிடித்துள்ளார். அதைகாட்டி அங்கேயே வைத்து அந்தப் பெண்ணை முனியசாமி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டிய படத்தை முனியசாமி அவரது செல்போனிலேயே வைத்துள்ளார். இந்நிலையில் முனியசாமியின் மனைவி சௌந்தரவல்லி 26.12.2021 தற்செயலாக கணவர் முனியசாமியின் செல்போனை பார்த்துள்ளார்.
அதில் அந்தப் பெண்ணும் முனியசாமியும் திருமணம் செய்த படி இருந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அவர் இதுகுறித்து முனியசாமியிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார். பின்பு அந்த பெண்ணின் வீட்டிற்கும் சென்று அவரிடமும் சண்டை போட்டு தகாத வார்த்தைகளால் திட்டி அவரை கொலை செய்வதாக மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து இளம்பெண் நடந்த சம்பவம் தொடர்பாக பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் நடந்த சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தது. உடனே முனியசாமியை போலீசார் செய்தனர். தலைமறைவாகியுள்ள கருப்பு ராஜாவை தேடி வருகின்றனர்.