பட்டப்பகலில் தொழிலதிபர் வெட்டிக் கொலை... 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்..!

Published : Apr 19, 2019, 02:31 PM IST
பட்டப்பகலில் தொழிலதிபர் வெட்டிக் கொலை... 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்..!

சுருக்கம்

கோவையில் தொழில் அதிபரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் தொழில் அதிபரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை போத்தனூர் செட்டிப்பாளையம் அருகே மீனா எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 36). இவர் செட்டிப்பாளையம் ரோட்டில் அப்பகுதியில் ஒலிம்பிக் என்ற பெயரில் பழைய கார்களை விற்பனை செய்யும் மையம் மற்றும் கார்களின் பழுதுகளை நீக்கும் பணிமனை வைத்து நடத்தி வந்தார்.

  

நேற்று வழக்கம் போல ஊழியர்கள் 4 பேர் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது பிற்பகல் அளவில் 3 இருசக்கர வாகனங்களில் 6 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் நிறுவனத்துக்குள் நுழைந்தது. பின்னர் அங்கிருந்த பொருட்களை சூறையாடிய அவர்கள் சிசிடிவி கேமிராக்களை அடித்து உடைத்தனர். இதனையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

சத்தம் கேட்டு தொழிலதிபர் பரந்தாமன் அறைக்குள் இருந்து வெளியே வந்தார். இதனையடுத்து அந்த கும்பல் பரந்தாமனை சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்ந்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே கும்பல் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பினர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தொழிலதிபர் பரந்தமான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். பரந்தாமன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்த கும்பல் யார்? தொழில் ரீதியான விரோதமா? அல்லது வேறு காரணங்கள் எதுவும் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்
அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்