பெண் மோகத்தால் நடுக்கடலில் கோடீஸ்வரர் கொலை... கூலிப்படை ஏவிய பெண் வழக்கறிஞர் குறித்து பகீர் தகவல்..!

By vinoth kumarFirst Published Jul 21, 2019, 1:28 PM IST
Highlights

பெண் மோகத்தால், பணத்தை இழந்த நபரின் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியான பெண் வழக்கறிஞர் குறித்து, போலீசார் திடுக்கிடும் தகவல் தெரிவித்தனர். தலைமறைவாக உள்ள பெண் வழக்கறிஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

பெண் மோகத்தால், பணத்தை இழந்த நபரின் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியான பெண் வழக்கறிஞர் குறித்து, போலீசார் திடுக்கிடும் தகவல் தெரிவித்தனர். தலைமறைவாக உள்ள பெண் வழக்கறிஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

சென்னை அடையார் இந்திரா நகர் முதல் அவென்யூவை சேர்ந்தவர் சுரேஷ் பரத்வாஜ் (50). திருமணமாகாதவர். இந்நிலையில், தனது வீட்டில் வேலைசெய்யும் வேலைக்கார பெண் மேல் ஏற்பட்ட ஒருதலை காதலால் அவரிடம் தவறாக நடக்க முயற்சித்தாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் வேலையை விட்டு நின்றார். இதனையடுத்து, அந்த பெண்ணுக்கு  கொடுத்த ரூ.4 லட்சம் பணம் மற்றும் அந்த பெண்ணை சேர்த்து வைக்கோரி பெண் வழக்கறிஞர் ப்ரீத்தா என்பவரிடம் பரத்வாஜ் அணுகினார். அதன்பேரில் 65 லட்சம் பெற்றுகொண்டு இருவரையும் சேர்த்து வைக்காமல் பெண் வழக்கறிஞர் ஏமாற்றி வந்துள்ளார்.

 
 
இந்நிலையில், பரத்வாஜ் கொடுத்த பணத்தை கேட்கவே பெண் வழக்கறிஞர் அவரை கூலிப்படை வைத்து கொலை செய்து நடுக்கடலில் வீசினர். பரத்வாஜ் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் பரத்வாஜின் செல்போன் எண் ஆதாரங்களை வைத்து விசாரணை நடத்தியதில், கூலிப்படை தலைவன் பிரகாஷ் மற்றும் சுரேஷ் (40), மனோகர் (45), ராஜா  மற்றும் சதீஷ் உட்பட 6 பேரை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இதில் முக்கிய குற்றவாளியான பெண் வழக்கறிஞர் ப்ரீத்தாவை தேடிவந்தனர்.

  

இந்நிலையில், பெண் வழக்கறிஞர் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவலை போலீசார் கூறியுள்ளனர். அதில், பரத்வாஜிக்கு, வாடகை மூலம், மாதம் பல லட்சம் ரூபாய், வருமானம் கிடைக்கிறது. வெளிநாட்டில் வசிக்கும் சகோதரரும், பல வகைகளில், அவருக்கு உதவி செய்து வந்துள்ளார். மோகம்பரத்வாஜிக்கு, பணத்திற்கு பஞ்சமில்லை. மது, புகை அருந்தும் பழக்கம் இல்லாத அவர், பெண்கள் மீது மோகம் கொண்டுள்ளார். இது தான், அவரை பலி வாங்கிவிட்டது.

 

 கொலை குற்றவாளி ப்ரீத்தா, கணவனை பிரிந்து வாழ்கிறார். 2-வது வேறு ஒரு நபருடன் குடும்பம் நடத்தி, அவரும் பிரிந்து சென்றுள்ளார். நீதிமன்றம் செல்வதில்லை. வழக்கறிஞர் தொழிலை வைத்து, கட்டப்பஞ்சாயத்து செய்வது தான், இவரது வழக்கம். இவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் மகள் என கூறப்படுகிறது. பெற்றோர் மற்றும் சகோதரர்கள் மீதும், சொத்து வழக்கு தொடுத்து, தொல்லை கொடுத்து உள்ளார். ப்ரீத்தாவுக்கு, ஒரு ஆண் வழக்கறிஞர், அடைக்கலம் கொடுத்துள்ளதாக தெரிய வருகிறது. நாங்கள் அவரை நெருங்கும்போது, வேறு இடத்திற்கு மாறிவிடுகிறார். ஓரிரு நாளில், ப்ரீத்தாவை கைது செய்துவிடுவோம் என்று போலீசார் கூறியுள்ளனர். 

click me!