நள்ளிரவில் பயங்கரம்..! பிரபல தொழிலதிபர் வெட்டிப் படுகொலை..!

Published : Jan 21, 2020, 11:44 AM ISTUpdated : Jan 21, 2020, 12:03 PM IST
நள்ளிரவில் பயங்கரம்..! பிரபல தொழிலதிபர் வெட்டிப் படுகொலை..!

சுருக்கம்

கொலையானவர் அருகே ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், மோட்டார் வாகனம் ஆகியவை கிடந்தது. அதில் இருந்த தகவலின்படி சடலமாக கிடந்தவர் காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன்(62) என்பது தெரியவந்தது. இவர் சேலம் பகுதியில் பிரபல தொழிலதிபராக விளங்கி வந்துள்ளார். 

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே இருக்கிறது காமனேரி கிராமம். இங்கிருந்து கோவிலூர் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அடித்து கொல்லப்பட்டு சடலமாக கிடந்தார். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்படி கிராம நிர்வாக அலுவலர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விரைந்து வந்த காவலர்கள் சடலம் கிடந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். கத்தியால் குத்தியும், கழுத்தை நெரித்தும் கொடூரமான முறையில் அவர் கொல்லப்பட்டு இருந்தார்.

கொலையானவர் அருகே ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், மோட்டார் வாகனம் ஆகியவை கிடந்தது. அதில் இருந்த தகவலின்படி சடலமாக கிடந்தவர் காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன்(62) என்பது தெரியவந்தது. இவர் சேலம் பகுதியில் பிரபல தொழிலதிபராக விளங்கி வந்துள்ளார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

அதன்படி கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே குடும்பத்தைவிட்டு பிரிந்த பாலசுப்ரமணியன், சேலத்தில் நண்பர் ஒருவருடன் தங்கி இருந்து தொழில் பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் தற்போது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறார். தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறேதும் காரணமா? என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நள்ளிரவில் தொழிலதிபர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read:  திருப்பதியில் இனி இலவச லட்டு..! தேவஸ்தானம் அதிரடி..!

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!