உன்னால் தானே நான் என் கணவரை இழந்தேன்.. புதுமாப்பிள்ளையை உயிருடன் தீ வைத்து எரித்த கள்ளக்காதலி..!

Published : Jun 15, 2021, 03:07 PM IST
உன்னால் தானே நான் என் கணவரை இழந்தேன்.. புதுமாப்பிள்ளையை உயிருடன் தீ வைத்து எரித்த கள்ளக்காதலி..!

சுருக்கம்

ராதாவின் கணவன் ஜெயக்குமார் ஏற்கனவே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதன் பிறகும், சதீஷ்குமாருடனான கள்ளக்காதலை ராதா கைவிடவில்லை. நேற்று  வேறு ஒரு பெண்ணுடன் சதீஷ்குமாருக்கு திருமணம் நடைபெற இருந்தது. இனிமேல் சதீஷ்குமார் நமக்கு கிடைக்க மாட்டார் என்ற விரக்தியிலும், உன்னால் தானே நான் என் கணவரை இழந்தேன் என்ற வேதனையிலும் சதீஷ்குமார் மீது ராதா மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.

புதுக்கோட்டை அருகே புதுமாப்பிள்ளையை வீட்டுக்கு வரவழைத்து நள்ளிரவில் தீ வைத்து எரித்த கள்ளக்காதலியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி அருகே உள்ள கரையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (25). சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஜெயக்குமார் மனைவி ராதா (32) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில் சதீஷ்குமாருக்கும், வேறொரு பெண்ணுக்கும் நேற்று  திருமணம் நடைபெற இருந்தது. இதனால், கள்ளக்காதலியுடன் பேசுவதை அவர் தவிர்த்து வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த ராதா நேற்று முன்தினம் இரவு சதீஷ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு உன்னிடம் பேச வேண்டும் என் வீட்டிற்கு வா என்று அழைத்துள்ளார். 

இதனையடுத்து, கள்ளக்காதலி வீட்டிற்கு சதீஷ்குமார் சென்றுள்ளார். பின்னர், அவரிடம் நைசாக பேசி இருவரும் உல்லாசமாக இருந்ததால் அவர் அயர்ந்து அங்கேயே தூங்கி விட்டார். அப்போது, சதீஷ்குமார் மீது மண்ணெண்னையை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் தீப்பிடித்து பதறியடித்து எழுந்த சதீஷ் தனது உடைகளை அங்கேயே கழட்டி எறிந்து விட்டு, ராதா வீட்டில் இருந்து தெருவுக்கு ஓடி வந்தார். அலறம் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர்  ஓடிவந்து தீயை அணைத்து ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சதீஷ்குமாருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி ராதாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த ராதாவின் கணவன் ஜெயக்குமார் ஏற்கனவே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதன் பிறகும், சதீஷ்குமாருடனான கள்ளக்காதலை ராதா கைவிடவில்லை.

நேற்று  வேறு ஒரு பெண்ணுடன் சதீஷ்குமாருக்கு திருமணம் நடைபெற இருந்தது. இனிமேல் சதீஷ்குமார் நமக்கு கிடைக்க மாட்டார் என்ற விரக்தியிலும், உன்னால் தானே நான் என் கணவரை இழந்தேன் என்ற வேதனையிலும் சதீஷ்குமார் மீது ராதா மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார் என்பது தெரிய வந்தது. பின்னர் ராதாவை போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

PREV
click me!

Recommended Stories

இரண்டு குழந்தைகளின் தாயான 26 வயது அமிர்தா.. 32 வயது சித்தேஷ்.. 24 மணி நேரத்தில் சிக்கியது எப்படி?
கதறிய மாமியார்.. விடாத மருமகன்.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்