நம்பிச் சென்ற காதலியை, 4 நண்பர்களுடன் மாறி மாறி கற்பழித்த கொடூரம்... விழுப்புரத்தில் நடந்த துயரம்!!

Published : Jun 22, 2019, 04:24 PM IST
நம்பிச் சென்ற காதலியை, 4 நண்பர்களுடன் மாறி மாறி கற்பழித்த கொடூரம்... விழுப்புரத்தில் நடந்த துயரம்!!

சுருக்கம்

வேலைக்குச் சென்று இரவில் வீடு திரும்பிய காதலியை அவரது காதலனே தனது 4 நண்பர்களுடன் சேர்ந்து கதற கதற கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

வேலைக்குச் சென்று இரவில் வீடு திரும்பிய காதலியை அவரது காதலனே தனது 4 நண்பர்களுடன் சேர்ந்து கதற கதற கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்டமங்கலத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் அதே பகுதியிலுள்ள கொசுவர்த்திச் சுருள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த புதன்கிழமையன்று மாதியான ஷிப்ட்க்கு சென்றவர் இரவு 11 மணியாகியும் வீட்டிற்கு வராததால்,  அவரைத் தேடிக்கொண்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் சென்றபோது, அப்பெண்ணுடன் முன்பு அதே நிறுவனத்தில் பணிபுரிந்த அவரது நண்பர் அருள்ஜோதி அழைத்துச் சென்றது தெரிகிறது. இதனைத் தொடர்ந்து இருவரையும் தேடிச் சென்ற நிலையில், அப்போது விநாயகபுரம் ரயில்வே கேட் பகுதியிலிருந்து அருள்ஜோதி மட்டும்  வந்துள்ளான். அவனை பிடித்து செம்ம குத்து குத்தி கேட்டதில், தாங்கள் இருவரும் வீடு நோக்கி வந்தபோது, 4 பேர் கொண்ட கும்பல் தன்னை தாக்கிவிட்டு அந்த பெண்ணை கடத்திச் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளான்.

பதறிக்கொண்டு சென்ற உறவினர்கள் இளம்பெண்ணை உடல் முழுவதும் காயங்களுடன் அங்குள்ள தண்டவாளத்தில் இருந்து மீட்டுள்ளனர். உடனடியாக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரணையில் நடத்தியதில் அதிர்ச்சித் தகவல் வெளியானது.

அருள்ஜோதியும், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும் பள்ளியிலிருந்து காதலித்து வந்துள்ளனர்.  அவரும் அந்த பெண் வேலை பார்க்கும் நிறுவனத்திலேயே பணிபுரிந்து, பின்னர் வேலையை விட்டு நின்றுவிட்ட அருள்ஜோதி, கடந்த புதன் கிழமையன்று  இளம்பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டுவிடுவதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளான்.

விநாயகபுரம் ரயில்வே கேட் அருகே ஆளரவமற்ற பகுதிக்கு அழைத்துச் சென்றவன் அங்கு ஏற்கனவே திட்டம்போட்டு பதுங்கியிருந்த அவனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து மாறி மாறி  கற்பழித்ததாக அந்த பெண் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற இளம்பெண்ணை அடித்து, உதைத்து, தண்டவாளத்திலேயே தரதரவென அவர்கள் இழுத்துச் சென்று கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

இந்நிலையில், பெண்ணின் வாக்குமூலத்தை வைத்து அருள்ஜோதியை போக்சோ உள்ளிட்ட இரு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய அவனது நண்பர்கள் 4 பேரையும் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!
கண் விழித்து பார்த்த மருத்துவ மாணவி.! சிதறி கிடந்த ஆடைகள்.! ஒரு வேகத்தில் அப்படி செஞ்சுட்டேன்.! டாக்டர் கதறல்