குழந்தைகள் பெற்ற காதலியை சேர்த்து வைக்க சொல்லி பழைய காதலன் போராட்டம்!! வேதனையில் நொந்து போன கணவன்

Published : May 07, 2019, 10:33 AM ISTUpdated : May 07, 2019, 10:34 AM IST
குழந்தைகள் பெற்ற காதலியை சேர்த்து வைக்க சொல்லி பழைய காதலன் போராட்டம்!! வேதனையில் நொந்து போன கணவன்

சுருக்கம்

வேறு ஒருவருடன் கல்யாணமாகி குழந்தைகள் பெற்ற தனது பழைய காதலியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்போன் டவரில் ஏறி காதலன் தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டம் நடத்திய சம்பவம்  பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவேற்காட்டை சேர்ந்த மீனா, தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண் திடீரென குழந்தைகளுடன் காணாமல் போனார். மனைவி குழந்தை காணாமல் போனதால் அவரது கணவர் பூந்தமல்லி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில், அந்த பெண்  கல்யாணத்திற்கு முன்பு  காதலித்த முரளி  என்பவரை சந்திக்க சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து குழந்தைகளுடன் இளம்பெண்ணை அழைத்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அந்த பெண் தனது கணவருடன் செல்ல மறுத்து விட்டதாகவும் பழைய காதலனுடன் வாழ விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில் அந்த பெண்ணின் காதலன் முரளியை விசாரணைக்கு அழைத்திருந்ததால் நேற்று முன்தினம் இரவு மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்த முரளி, காதலியை பெற்றோருடன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், போலீசாருடன் சண்டை போட்டுள்ளார். விரக்தியின் உச்சத்திற்கு சென்ற அவர், போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள செல்போன் டவரில்  ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விட்டதால்  அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. 

அங்கு வந்த போலீசார் முரளியை செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்குமாறு கூறினார்கள். ஆனால் முரளியோ காதலி மீனாவை தன்னுடன் அனுப்பி வைக்கும் வரை செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்க மாட்டேன் என்றும், தனது காதலி மீனா நேரில் வர வேண்டும் என டிமாண்ட் வைத்ததால் அவருடைய காதலி மீனாவை போலீசார் அங்கு வரவழைத்தனர். காதலியை பார்த்தவுடன் முரளி செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கினார். இதையடுத்து போலீசார் காதலன் முரளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!