வேறு இரு ஆண்களுடன் உல்லாசமாக இருந்த காதலி... நேரில் பார்த்து தட்டிக் கேட்ட காதலனுக்கு நேர்ந்த அவலம்!!

Published : May 11, 2019, 03:25 PM IST
வேறு இரு ஆண்களுடன் உல்லாசமாக இருந்த காதலி... நேரில் பார்த்து தட்டிக் கேட்ட காதலனுக்கு நேர்ந்த அவலம்!!

சுருக்கம்

தனது காதலி, பல ஆண்களுடன் உல்லாசமாக இருப்பதை தெரிந்து கொண்ட காதலன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது காதலி, பல ஆண்களுடன் உல்லாசமாக இருப்பதை தெரிந்து கொண்ட காதலன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள உயர் தர சலூன் கடையில் வேலை செய்துவந்த  ஷோபித் சிங் கடந்த மாதம் 13ம் தேதி காணாமல் போனார். எனவே, அவரது நண்பர்கள் மற்றும் அவர் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோர் அவரை  எங்கெங்கோ தேடி அலைந்துள்ளனர்.

இந்நிலையில், அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து அவரது நண்பர் ஒருவர் கைப்பற்றிய கடிதத்தில் உருகவைக்கும் அளவிற்கு அந்த இளைஞன் எழுதியிருந்தார். அதில், தான் மிகவும் உருகி நேசித்த தன் காதலி, வேறு இரண்டு ஆண்களுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்தார். நேரில் பார்த்த ஷோபித் சிங் இதைக்கேட்ட போது, காதலி ரேஷ்மாவும், அந்த இரு ஆண்களும் என்னை தாக்கினர். நான் என் காதலி ரேஷ்மாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டது போல பேச வைத்து வீடியோ எடுத்து வைத்து போலீசில் புகார் அளிப்பதாக என்னை மிரட்டினர். அதனால் நான் தற்கொலை செய்கிறேன் என உருக்கமாக எழுதியிருந்தார். மேலும் அதில், என் மரணத்திற்கு என் காதலி ரேஷ்மாவும், அவளோடு உடலுறவில் இருந்த அந்த இரண்டு  ஆண்களுமே காரணம் எனக்கூறி அவர்களின் பெயர்களையும் ஷோபித் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

எனவே, இந்த கடிதத்தை ஷோபித் பணிபுரிந்த நிறுவனத்தின் உரிமையாளர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார். இந்நிலையில், கடந்த 29ம் தேதி அழுகிய நிலையில் அவரின் உடலை அந்தேரி மேற்கு பகுதியில் அமைந்துள்ள அம்போலி எனும் இடத்தில் கண்டுபிடித்தனர்.

PREV
click me!

Recommended Stories

காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்
அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்