கள்ளக்காதலியின் 3 மகள்களையும் விடாத காமத் கொடூரன்... விடாமல் விரட்டிச் சென்று வெறிதீர செய்த கொடூரம்...

By sathish kFirst Published Aug 28, 2019, 12:34 PM IST
Highlights

நான்கு பெண்களை கொலை செய்த வழக்கில், காம கொடூரனுக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம், அந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று கூறி தீர்ப்பளித்துள்ளது. 

நான்கு பெண்களை கொலை செய்த வழக்கில், காம கொடூரனுக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம், அந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று கூறி தீர்ப்பளித்துள்ளது. 

பழனியில் உள்ள பேக்கரி ஒன்றில் சின்னராஜ் அவரது மனைவி பாண்டியம்மாள் ஆகியோர் வேலை செய்து வந்தனர். தம்பதிக்கு 3 குழந்தைகள் இருந்துள்ளது. இந்தநிலையில், உதயன் என்ற வாலிபருக்கும், பாண்டியம்மாளுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, பாண்டியம்மாள் தனது 3 பெண் குழந்தைகளை அழைத்துக்கொண்டு, உதயனுடன் சென்னை, ராயப்பேட்டை முத்து தெருவிற்கு வந்து, வசித்து வந்தார்.

இந்த நிலையில் உதயன், பாண்டியம்மாளின் பெண் குழந்தைகளுடன் அடிக்கடி பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றுள்ளார். இது குறித்து அவர் கண்டித்தும், உதயன் கேட்கவில்லை. இதனால், அவருடனான தொடர்பை  பாண்டியம்மாள் துண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த உதயன் பாண்டியம்மாள் மற்றும்  3 பெண் குழந்தைகளை  கொலை செய்ய திட்டமிட்டார். 

அதன்படி கடந்த 2016ம் ஆண்டு, அதிகாலை 2.30 மணிக்கு வீட்டிற்கு சென்ற உதயன், பாண்டியம்மாள் மற்றும் 3 பெண்களையும் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் அந்த பெண்களிடம் உடல் ரீதியாக தவறாகவும் நடந்துள்ளான். இச்சம்பவம் கொடூர தொடர்பாக ராயப்பேட்டை போலீசார், வழக்கு பதிவு செய்து உதயனை சிறையில் அடைத்தனர். 

இந்தநிலையில், இந்த வழக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் லேகா ஆஜராகி வாதிட்டார். அப்போது நீதிபதி, உதயன் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு 4 கொலை வழக்குகளில் 4 ஆயுள்  தண்டனைகள் விதிக்கப்படுகிறது. அந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று கூறி தீர்ப்பளித்தார்.

click me!