ஷாக்கிங் நியூஸ்! சென்னை மெரினாவில் தோண்ட தோண்ட சாராய குவியல் - போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி !

By Raghupati RFirst Published May 18, 2022, 12:20 PM IST
Highlights

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலைக்கும், நேதாஜி சிலைக்கும் இடைப்பட்ட பகுதியில் சாராயம் சிறு பாட்டில்களில் அடைத்துவைக்கப்பட்டு 50 முதல் 100 ரூபாய்க்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். அப்போது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 3 பெண்கள் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மூன்று பெண்களையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், அவர்களிடம் இருந்த 32 லிட்டர் சாராய பாட்டில்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

அப்போது அவர்கள் கூறும்போது, ஆந்திராவில் இருந்து சாராயங்களை கொள்முதல் செய்து ரயில் மூலம் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து ஷேர் ஆட்டோக்கள் மூலம் மெரினாவிற்கு கொண்டு வந்ததாகவும், அங்கு மணற்பகுதியில் மறைத்துவைத்து சிறு பாட்டில்களில் ஊற்றி விற்பனை செய்துவந்ததாக தெரிவித்தனர். மேலும் 100 லிட்டர் சாராயம் மண்ணில் மறைத்துவைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின் படி போலீசார் மெரினா கடற்கரையில் ஜேசிபி இயந்திரங்களை வைத்து குறிப்பிட்ட இடத்தில் தோண்டும் போது 2 லிட்டர் பாட்டில்களில் சாராயங்கள் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. 

பின்னர் அதனை கைப்பற்றிய போலீசார், காவல் நிலையத்திற்கு கொண்டுசென்றனர். வேறு எங்கும் இதே போல சாராய பாட்டில்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதான் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் மூலமாக ஆந்திராவிலிருந்து சாராயத்தை சென்னை கொண்டு வந்து மெரினா கடற்கரை மணலில் புதைத்து விற்ற வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மெரினா கடற்கரை மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சாராயத்தை ஜேசிபி மூலம் தோண்டி எடுத்துள்ளனர் காவல்துறையினர். 

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை மெரினா கடற்கரை மணலில் சாராயம் புதைத்து வைத்து விற்பனை செய்யப்படுதாக மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தனிப்படை போலீசார் ஆய்வு செய்ததில் மெரினா கடற்கரையில் உள்ள நேதாஜி சிலைக்கும், கண்ணகி சிலைக்கும் இடைப்பட்ட மணற்பரப்பில் மணலில் கள்ளச்சாராயம் புதைத்து வைத்து இருப்பது அவர்களுக்கு தெரிந்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு மேலும் சோதனை செய்துள்ளனர். அதில் சில சிறிய பாட்டில்கள், 2 லிட்டர் தண்ணீர் பாட்டில் போன்றவற்றில் சாராயத்தை மணலில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. 

இப்படி வைக்கப்பட்டிருந்த மொத்தம் 35 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனை மணலில் புதைத்து வைத்து விற்பனை செய்து வந்த மகாராஷ்டிரா மாநிலத்தை ஜென்தூஸ் கோஸ்லயா, சில்பா போஸ்லே, சுனந்தா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து மெரினா காவல் நிலைய போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களுடன் சேர்ந்து வசித்து வந்த 35 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். நாடோடிக் கூட்டமாக இருந்த இவர்கள், குடும்பமாக இங்கு தங்கி வருவதாகவும், இவர்கள் ஆந்திராவில் இருந்து சாராயம் வாங்கி வந்து மெரினா மணற்பரப்பில் கண்ணகி சிலை பின்புறம் மணலில் புதைத்து வைத்து விற்பனை செய்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விஷால் வினோத் பவார் என்பவரை மெரினா போலீசார் நேற்று இரவில் கைது செய்துள்ளனர். நேற்றைய தினம் மணற்பரப்பில் 2 பாட்டில்கள் சாராயம் எடுத்து கொண்டு சென்றபோது போலீசாரிடம் அவர் சிக்கி கொண்டார். மேலும் சாராய பாட்டில்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்தாக காவல் துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் உதவியுடன் ஜேசிபி இயந்திரங்களை வைத்து நேற்று இரவு மெரினா மணற்பரப்பில் போலீசார் தோண்டினர். 

அப்போது மண்ணில் மறைத்து வைத்திருந்த எட்டு 2 லிட்டர் பாட்டில்கள் சாராயத்தை தோண்டி எடுக்கப்பட்டது. தண்ணீர் பாட்டில்களில் அடைத்து வைத்திருந்த சாராயங்களை பறிமுதல் செய்து பக்கெட்கள் மூலம் போலீசார் எடுத்து சென்றனர். கைதான விஷால் வினோத் பவாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயத்தை ரயில் மூலமாக வாங்கி வந்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இவர்களுக்கு சாராயத்தை சப்ளை செய்த ஆந்திர நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க : பிரதமருடன் ரகசிய மீட்டிங்.. தமிழகம் முழுக்க மக்கள் சந்திப்பு.! பக்கா பிளானில் களமிறங்கும் எடப்பாடி பழனிச்சாமி

இதையும் படிங்க : இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 எப்போது கிடைக்கும் ? அமைச்சர் சொன்ன குட் நியூஸ் !

click me!