கள்ளக்காதலனுடன் உல்லாசம்..வீட்டிலேயே நகை திருடிய கில்லாடி மகள்.! அதிர்ச்சி சம்பவம் !

Published : May 18, 2022, 10:46 AM ISTUpdated : May 18, 2022, 10:48 AM IST
கள்ளக்காதலனுடன் உல்லாசம்..வீட்டிலேயே நகை திருடிய கில்லாடி மகள்.! அதிர்ச்சி சம்பவம் !

சுருக்கம்

பெங்களூருவில், சொந்த வீட்டில் ஒரு கிலோ தங்க நகைகளை திருடி உல்லாசமாக சுற்றிய பெண், கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலம், பெங்களூருவில், சொந்த வீட்டில் ஒரு கிலோ தங்க நகைகளை திருடி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக சுற்றிய பெண் கைது செய்யப்பட்டார். அவரது கள்ளக்காதலனும் கைதானார். பெங்களூரு ஜக்கூரு லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் தீப்தி (வயது 24). இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாயுடன் வசித்து வந்தார். 

இந்த நிலையில் கார் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் எடுக்க ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு தீப்தி சென்றபோது அவருக்கு மதன் (27) என்பவர் கார் ஓட்ட பயிற்சியாளருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஆனால் மதனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இதுபற்றி தெரிந்தும் மதனை, தீப்தி காதலித்து வந்து உள்ளார். இந்த நிலையில் பணக்கஷ்டத்தில் சிக்கி தவித்து வந்த தனது காதலனுக்கு உதவ தீப்தி முடிவு செய்தார். 

அதன்படி தனது வீட்டில் இருந்த நகைகளை கொஞ்சம், கொஞ்சமாக திருடி வந்து மதனிடம் கொடுத்தார். அந்த நகையை ஒரு நிதி நிறுவனத்தில் அடகு வைத்து அதன்மூலம் கிடைத்த பணத்தில் மதனும், தீப்தியும் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக சுற்றி வந்தனர். இவ்வாறாக வீட்டில் இருந்து ஒரு கிலோ நகைகளை தீப்தி திருடி மதனுக்கு கொடுத்து உள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனது பற்றி அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் ஒரு கிலோ நகைகளை திருடியதாக தீப்தி மீது அவரது தாயே புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் தீப்தியை பிடித்து விசாரித்த போது வீட்டில் இருந்து நகைகளை திருடி காதலனுக்கு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து தீப்தியையும், மதனையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.36 லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : பிரதமருடன் ரகசிய மீட்டிங்.. தமிழகம் முழுக்க மக்கள் சந்திப்பு.! பக்கா பிளானில் களமிறங்கும் எடப்பாடி பழனிச்சாமி

இதையும் படிங்க : இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 எப்போது கிடைக்கும் ? அமைச்சர் சொன்ன குட் நியூஸ் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!