பா.ஜ.க. இளைஞரணி தலைவர் வெட்டிப்படுகொலை

Published : Feb 01, 2019, 10:48 AM ISTUpdated : Feb 01, 2019, 10:50 AM IST
பா.ஜ.க. இளைஞரணி தலைவர் வெட்டிப்படுகொலை

சுருக்கம்

புதுக்கோட்டையில் பா.ஜ.க. இளைஞரணி தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் பா.ஜ.க. இளைஞரணி தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, ஆவுராணிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வவிநாயகம் (26). அறந்தாங்கி ஒன்றிய, பா.ஜ.க. இளைஞரணி தலைவராக இருந்து வந்தார். இவர் பத்தரசன் கோட்டையில் அரசுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நெற்பயிர் நடவு செய்து இருந்தார். இவருக்கும் அர்ஜூனன் என்பவருக்கும் இடையே அரசு நிலத்தில் விவசாயம் செய்வது, அரசு நிலத்தை உரிமை கோருவது தொடர்பான முன்விரோதம் இருந்துள்ளது. 

கண்மாய் உள் வரத்து பகுதியில் விவசாயம் செய்து உள்ளதால், கண்மாய்க்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் மற்ற விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் சிலர் குற்றம்சாட்டி வந்தனர். இது தொடர்பான வழக்கும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நிலுவையில் இருந்து வருகிறது.

 

பிரச்னைக்குரிய இடத்தில், செல்வவிநாயகம் நெல் பயிரிட்டு, தற்போது அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. நேற்று காலை, செல்வவிநாயகம், அவரது குடும்பத்தினர் அறுவடை செய்ய முயன்ற போது, மற்றொரு தரப்பினர் தடுத்தனர். இதில் தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியது. பின்னர் அங்கு இருந்த அரிவாளை எடுத்து செல்வவிநாயகத்தை வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்
அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்