ரூம் போட்டு யோசித்து தீர்த்துக் கட்டிய கணவன்! உடலில் ஆடையின்றி ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி!

By SG Balan  |  First Published Oct 21, 2023, 3:33 PM IST

ஹோட்டல் ஊழியர் ஒருவர் அறைக்குச் சென்று பார்த்தபோது, ​​ஷோபா உடலில் ஆடையின்றி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடைப்பதைக் கண்டுள்ளார். 


பீகாரின் தலைநகர் பாட்னாவில் உள்ள ஒரு ஹோட்டலில் வெள்ளிக்கிழமை பெண் காவலர் ஒருவர் உடலில் ஆடை ஏதும் இல்லாத நிலையில், சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அறையில் பல இடங்களில் இரத்தம் சிதறிக் கிடந்த்தை வைத்து அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள காகோ காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் கஜேந்திர யாதவ், வியாழக்கிழமை மாலை ஹோட்டல் அறையை முன்பதிவு செய்ததுள்ளார். அவரது மனைவி ஷோபா குமாரி காலையில் அவரைச் சந்திக்க அங்கு வந்து தங்கியுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

நீல கலர் ஆதார் அட்டை தெரியுமா? இந்த கார்டு யாருக்கு வழங்கப்படும்? விண்ணப்பிப்பது எப்படி?

மனைவி ஹோட்டல் அறைக்கு வந்த 15-20 நிமிடங்களுக்குப் பிறகு, கஜேந்திர யாதவ் வெளியே சென்றிருக்கிறார். ஹோட்டல் ஊழியர் ஒருவரிடம் தான் காலை உணவு வாங்கிவரப் போவதாகவும் சிறிது நேரத்தில் திரும்பிவிடுவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் தனது அறைக்குத் திரும்பவில்லை.

இதனால் ஹோட்டல் ஊழியர் ஒருவர் அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது, ​​அங்கு அவரது மனைவி ஷோபா உடலில் ஆடையின்றி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடைப்பதைக் கண்டுள்ளார். உடனடியாக இதுபற்றி காவல்துறைக்கு புகார் அளிக்கப்பபட்டது.

உயிரிழந்த பெண் ஷோபா குமாரி அர்வால் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மாநில காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்திருக்கிறார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமாகியுள்ள கஜேந்திர யாதவையும் தேடி வருகின்றனர்.

"முதல் பார்வையில் அந்தப் பெண்ணின் தலையில் சுடப்பட்டதாகத் தெரிகிறது" என்று டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகிறார். சம்பவ இடத்தில் இருந்து ஆயுதங்களையும் போலீசார் மீட்டுள்ளனர். அவர் ஹோட்டல் அறையில் தனது கணவரை எந்தச் சூழ்நிலையில் சந்தித்தார் என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மருத்துவ வாரியத்தின் மேற்பார்வையின் கீழ் இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பபட்டுள்ளது. இந்த வழக்கை மேலும் முறையாக விசாரிக்க தொழில்நுட்ப குழுக்களையும் காவல்துறை அமைத்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் போர் எதிரொலி... கூகுள், மெட்டா நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவு

click me!