133 லேப்டாப்களைத் திருடிய ஹை-டெக் திருடன்! வலைவீசி சிக்க வைத்த பெங்களூரு போலீஸ்!

By SG Balan  |  First Published Nov 7, 2023, 9:56 PM IST

ஐடி துறையில் வேலை பார்த்துவந்தவர், வேலை விட்டுவிட்டு லேப்டாப், ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டுகளைத் திருடி விற்கும் தொழிலில் இறங்கியிருக்கிறார்.


பெங்களூருவில் ஐடி ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் இருந்து ரூ.75 லட்சம் மதிப்புள்ள 133 லேப்டாப், 19 மொபைல் போன் மற்றும் 4 டேப்லெட்களைத் திருடிய கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியை போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டிருக்கும் நபர் திருட்டில் ஈடுபடுவதற்கு முன்பு ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தவர் என்றும் லேப்டாப், மொபைல் போன்களைத் திருடுவதற்காக விடுதிகளுக்குச் செல்வதை வழக்கமாகக் வைத்திருந்தவர் என்றும் விசாரணையில் தெரிந்துள்ளது.

Latest Videos

undefined

திருடிய லேப்டாப், ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டுகளை சந்தையில் விற்பனை செய்துள்ளார். அவர் கொண்டுவரும் பொருட்களை வாங்கி உடந்தையாக இருந்த இரண்டு கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீபாவளி பரிசு! தமிழகத்திற்கு ரூ.2,976 கோடி வரி பகிர்வு நிதி முன்கூட்டியே விடுவிப்பு!

"மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர். இதுபோன்ற எட்டு வழக்குகளை அடையாளம் கண்டுள்ளோம். அந்தக் வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டறிய விசாரணை நடத்தி வருகிறோம்" என போலீசார் கூறுகின்றனர்.

இதனிடையே, பெங்களூருவின் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 11 வெவ்வேறு இடங்களில் நடத்திய சோதனையில், சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 13 பேரைக் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக 11 தனித்தனி வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை பறிமுதல் செய்திருக்கின்றனர்.

சூரியக் கதிர்வீச்சை பதிவு செய்த ஆதித்யா எல்1 விண்கலம்! இஸ்ரோ வெளியிட்ட புதிய அப்டேட்!

click me!