பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி ! மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சி !!

Published : Jun 18, 2019, 10:52 PM IST
பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி ! மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சி !!

சுருக்கம்

நன்னிலம் அருகே ஆயுள் தண்டனை கைதி மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள விசலூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவருடைய மகன் சாமிநாதன்.  இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2005-ம் ஆண்டு ஒரு வழக்கில் சாமிதாதனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்தநிலையில் சாமிநாதன் சகோதரரின் வீட்டின் புதுமனை புகுவிழா நடந்தது. இதில் பங்கேற்க சாமிநாதன் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார். காரைக்காலில் நடைபெற்ற புதுமனைபுகுவிழாவில் தனது மனைவி சரஸ்வதியுடன் கலந்து கொண்ட சாமிநாதன் விழா முடிந்த உடன் விசலூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.

நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் சாமிநாதன் தனது மனைவி மற்றும் மகன்களுடன் தூங்கினார். நேற்று காலை சாமிநாதனின் மகன்கள் தனது தாய்- தந்தையை காணவில்லை என தாத்தா மணிமாறனிடம் கூறினர். 

அப்போது வீட்டின் மற்றொரு அறையில் சாமிநாதனும் அவரது மனைவி சரஸ்வதியும் தூக்கில் பிணமாக தொங்கிதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த நன்னிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை கைப்பற்றி திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சாமிநாதன் ஏன் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

PREV
click me!

Recommended Stories

ரூமில் கள்ளக்காதலனுடன் மனைவி.. பார்க்க கூடாததை பார்த்த கணவர்.. குழந்தை வாக்குமூலத்தில் வெளிவந்த பகீர் உண்மை!
இன்ஸ்பெக்டர் வீட்டில் குளித்த கல்லூரி மாணவி.. வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த போலீஸ்காரர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்