பிரபல எழுத்தாளராக இருந்தாலும் கடைக்காரரிடம் தகராறு செய்திருந்தால், விட்டுவிடக் கூடாது என்று புளிச்ச மாவு மேட்டரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா காட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
கடந்த பழைய மாவா இருந்தாலும் பரவாயில்லையென சொல்லிவிட்டு வாங்கிக்கொண்டு போன ஜெயமோகன், திடீர்ன்னு, மாவு பாக்கெட்டோடு பைக்குல வந்து ஏண்டி நாயே தே...மவளே... என்ன மாவடி கொடுத்திருக்கன்னு கேட்டுக்கிட்டே மாவு பாக்கெட்டை தூக்கி கடைக்கார பெண்மணி மூஞ்சில வீசியதை பார்த்துக்கொண்டிருந்த அந்த பெண்மணியின் வீட்டுக்காரர் தனது சம்சாரத்தை திட்டியது பிரபல எழுத்தாளர் என்று தெரிந்தும் மல்லாக்க போட்டு மாங்கு மாங்குனு குத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து கடைக்காரர்களால் தாக்கப்பட்டதாக வடசேரி காவல் நிலையத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் புகார் அளித்துள்ளார். அதே நேரம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜெயமோகன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த கேப்பில் அந்த கடைக்காரர் மீது கைது நடடவடிக்கையும் எடுத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த புளிச்சமாவு விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. திரைப் படங்களிலும், தனது எழுத்துக்களிலும் ஆயிரமாயிரம் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு தனது வசனத்தால் புத்தி மத்தி சொல்லும் ஜெயமோகன், கடையில் வாங்கிய பொருள் கெட்டு போயிருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க சொல்லியிருக்கலாம். இவர் பிரபலம் என்பதால் சமூக வலைதளத்தில் எழுதியிருக்கலாம், அதை விட்டுட்டு வயிற்றுப் பொழப்புகாக சொந்தமாக முதல் போட்டு சுயமாக தொழில் நடத்தும் மளிகைக் கடைக்காரர் சம்சாரத்தோட சண்டைபோட்டது மட்டுமில்லாமல், அந்த பெண் மீது மாவு பாக்கெட்டை வீசியெறிந்து காது பொத்தும் அளவிற்கு, நாக்கு கூச புரட்சி வசனம் பேசியது சரியா ? என்று சமூக வலைதளங்களில் ஜெயமோகனை வெச்சு செஞ்சது நெட்டிசன் பட்டாளம்.
இந்தநிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா பேசியதாவது, ஜெயமோகன் பிரபல எழுத்தாளராக இருந்தாலும் அவர் வணிகரிடம் தகராறு செய்திருந்தால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயங்கக் கூடாது, சொந்தமா காசு போட்டு தொழில் நடத்தும் அவர்களிடம் இப்படி நடந்துகொள்வது அடாவடித்தனம் என்றும் விக்கிரமராஜா கூறியுள்ளார்.