பட்டப்பகலில் சினிமா பாணியில் ஆட்டோ டிரைவர் ஓட, ஓட விரட்டி படுகொலை... பொதுமக்கள் பீதி..!

Published : May 25, 2019, 06:09 PM IST
பட்டப்பகலில் சினிமா பாணியில் ஆட்டோ டிரைவர் ஓட, ஓட விரட்டி படுகொலை... பொதுமக்கள் பீதி..!

சுருக்கம்

அரக்கோணத்தில் பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரக்கோணத்தில் பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வேலூர் மாவட்டம் அரக்கோணம் பழனிப்பேட்டை, டி.என்.நகர் பகுதியை சேர்ந்தவர் சோமு. இவரது மகன் ஆட்டோ டிரைவர் அன்பு (வயது 34). வழக்கம்போல காலை சவ்வாரிக்காக ஆட்டோவை ஓட்டி சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்ட வந்தனர்.

சுதாரித்துக்கொண்ட அன்பு உயிர் பயத்தில் அவர்களிடம் தப்பி ஓடினார். ஆனால் அவரை விடாமல் தூரத்திய 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி கத்தியால் தலை, கழுத்து, முகம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அன்பு துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை வெட்டி சாய்த்து விட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அன்பு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!