உல்லாசத்துக்கு இடையூறு... கணவனை போட்டுத்தள்ளிய கள்ளக்காதலன், மனைவி..!

Published : May 25, 2019, 04:15 PM IST
உல்லாசத்துக்கு இடையூறு... கணவனை போட்டுத்தள்ளிய கள்ளக்காதலன், மனைவி..!

சுருக்கம்

செஞ்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கழுத்தை நெறித்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். 

செஞ்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கழுத்தை நெறித்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டம் அவலூர்பேட்டை அருகே உள்ள மேல் வயலாமூரை சேர்ந்தவர் காசி மகன் குணசேகரன் (வயது 45), விவசாயி. இவருக்கு காந்திமதி(38) என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். காந்திமதி அதேஊரை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பில் உள்ளதாக குணசேகரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

இது தொடர்பாக கடந்த 16-ம் தேதி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் காந்திமதி கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதையறிந்த குணசேகரனின் அண்ணன் சேட்டு காந்திமதியை சந்தித்து சமாதானம் செய்து கணவருடன் சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறி கடந்த 20-ம் தேதி அழைத்து வந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக மீண்டும் காந்திமதிக்கும் அவரது கணவர் குணசேகரனுக்கும் நேற்று இரவு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த காந்திமதி தூங்கிக்கொண்டிருந்த கணவரின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இது தொடர்பாக உடனே அவலூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குணசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மனைவி காந்திமதியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

 

அதில் தங்களது உறவுக்கு தொடர்ந்து இடையூறாக இருந்து வந்த குணசேகரனை காந்திமதியும், கார்த்திகேயனும் சேர்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டில் வைத்து கழுத்தை நெரித்து இருவரும் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. தலைமறைவான கார்த்திகேயனைத் தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..