பொய்வழக்கு போட்டாங்களாக..? வாலிபர் தீக்குளித்து தற்கொலை முயற்சி..பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..

Published : Mar 13, 2022, 08:56 PM ISTUpdated : Mar 13, 2022, 09:44 PM IST
பொய்வழக்கு போட்டாங்களாக..? வாலிபர் தீக்குளித்து தற்கொலை முயற்சி..பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..

சுருக்கம்

காவல்துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்த மனவேதனையில் வாலிபர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்தான  சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.  

காவல்துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்த மனவேதனையில் வாலிபர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்தான  சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். ஓட்டுநராக பணியாற்றி வரும் இவர் திமுக பகுதி செயலாளராக உள்ளார்.  இந்நிலையில் இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் புதிதாக சரக்கு வாகனம் ஒன்று வாங்கியுள்ளார். இதனிடையே நேற்றிரவு கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போக்குவரத்து போலீசார், அவ்வழியாக வந்த மினி ஆட்டோவில் வந்த சந்தோஷ்குமாரை விசாரித்து உள்ளனர்.

அப்போது அவர் குடிபோதையில் வண்டி ஓட்டி வந்தது தெரியவந்ததுள்ளது. இதனால் போலீசார் அவரை வண்டியை விட்டு கிழறங்க சொல்லி, மதுபோதையில் இருப்பதை உறுதிசெய்து வழக்குபதிவு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் சந்தோஷ்குமார், மதுபோதையிலே அருகில் இருந்த பெட்ரோல் பங்கிற்கு சென்று ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி வந்துள்ளார். 

மேலும் படிக்க: மருமகளுடன் உல்லாசம்.. கையும் களவுமாக பிடித்த மகன்.. அடுத்து என்ன நடந்தது தெரியுமா ?

பின்னர் கொண்டலம்பட்டி ரவுண்டானா பகுதியில் சந்தோஷ் குமார் தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ பற்றவைத்துக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதனை கண்ட அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் 80 சதவீத    தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சந்தோஷ் குமார் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுக்குறித்து அவரது உறவினர்கள் தெரிவிக்கையில், சந்தோஷ் குமார் நேற்று காலை புதிதாக சரக்கு வாகனம் வாங்கியதை கொண்டாடும் விதமாக  நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். குறைந்தளவு மது மட்டுமே சந்தோஷ்குமார் குடியிருந்ததாகவும் அரசு மதுபான கடைக்கு அருகில் உள்ள ஸ்டிக்கர் ஓட்டும் கடையில் நின்றுக்கொண்டிருந்த போது வேண்டுமென்று காவல்துறையினர் தகராறு செய்ததாகவும் கூறுகின்றனர். மேலும்  குடிபோதையில் வண்டி ஓட்டியதாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், மினி ஆட்டோவை பறிமுதல் செய்து உள்ளனர் என்று கூறுகின்றனர்.

மேலும் படிக்க: தம்பியுடன் தகாத உறவு.. கும்மாளம் போட்ட மனைவி.. கணவர் செய்தது என்ன தெரியுமா ?

மேலும் விரக்தியடைந்த சந்தோஷ்குமார் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். பிறகு, ஆத்திரம் திராத சந்தோஷ்குமார் பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் வாங்கி வந்து தன் உடல் மீது ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக சொல்லபடுகிறது. காவல்துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்த மனவேதனையில் வாலிபர் நேற்று தீக்குளித்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

"

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!