A,B,C,D சொல்ல தெரியாதா ? 6 வயது யுகேஜி சிறுவனை தாக்கிய ஆசிரியர் - அதிர்ச்சி சம்பவம் !

Published : Apr 19, 2022, 11:21 AM IST
A,B,C,D சொல்ல தெரியாதா ? 6 வயது யுகேஜி சிறுவனை தாக்கிய ஆசிரியர் - அதிர்ச்சி சம்பவம் !

சுருக்கம்

சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி டெய்சி ராணி தம்பதியர். இவரது மகன் சச்சின் பெரம்பூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார். இவருக்கு வயது 6 ஆகிறது.

சிறுவன் சச்சின் ஆங்கில எழுத்துகளான A,B,C,D சரியாக சொல்லவில்லை என்று கூறி அவரது பள்ளி ஆசிரியை பிரான்சி என்பவர் சிறுவனை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமுற்ற நிலையில் பள்ளியில் இருந்த மாணவன் சச்சினை அவரது பெற்றோர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த நிலையில் தனது மகனை தாக்கிய பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தையின் பெற்றோர் சென்னை திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து விசாரித்த சென்னை திரு.வி.க.நகர் போலிஸார் 3 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு கைதும் செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து முறையான அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக் கல்வித் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். A,B,C,D சரியாக சொல்லவில்லை என்பதற்காக சிறுவனை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க : மக்களே உஷார்.! மே 4 முதல் அக்னி நட்சத்திரம்.. வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!