ஏடிஎம் மையத்தில் 4 லட்சம் ரூபாய் கொள்ளை !! இளம் பெண் கைது !! ஈஸியா திருட என்ன காரணம் தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Dec 30, 2018, 8:13 AM IST
Highlights

புதுச்சேரியில் ஏடிஎம் மையத்தில், சுமார் 4 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்ததாக 28 வயது இளம் பெண் கைது செய்யப்பட்டு உள்ளார். ஏடிஎம்-ல் பணம் வைத்த வங்கி ஊழியர்கள் அதை சரியாக பூட்டாமல் போனதால் இரகுவாக கொள்ளையடிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில், 3 லட்சத்து 90 ஆயிரம்  ரூபாய் திடீரென கொள்ளை போனது. இதையடுத்து வங்கி அதிகாரிகள் சி.சி. டிவி காமிரா காட்சி உதவியுடன் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது பணத்தை 28 வயது இளம் பெண் சித்ரா என்பவர் கொள்ளையடித்தது தெரியவந்ததால், அவர் போலீசார் கைது செய்துள்ளார்.

பல கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளை அடிக்க முயன்று முடியாமல் போகும் நிலையில், ஒரு சிங்கிள் இளம்பெண் ஏடிஎம் –ல் இருந்து எப்படி 4 லட்சம் ரூபாயை கொள்ளை அடிக்க முடியும் என அசந்துபோன போலீசார், பின்னர்  அவர் ஈஸியாக எப்படி கொள்ளை அடித்தார் ? என்பது குறித்து அறிந்து தலையில் அடித்துக் கொண்டனர்.

அதாவது ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பி வைக்கும் பெட்டியை வங்கி ஊழியர்கள் சரியாக பூட்டாமல் அஜாக்கிரதையாக சென்றதே இந்த கொள்ளைக்கு காரணம் என்பது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிசிடிவி காமிரா காட்சி மூலம் கொள்ளை நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே இளம் பெண் பிடிபட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!