கோவையில் பரபரப்பு... திறந்து கிடந்த எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரம்… பல லட்சம் தப்பியது!

Published : Nov 13, 2018, 05:11 PM ISTUpdated : Nov 13, 2018, 05:13 PM IST
கோவையில் பரபரப்பு... திறந்து கிடந்த எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரம்… பல லட்சம் தப்பியது!

சுருக்கம்

கோவை அருகே பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரம், நேற்று நள்ளிரவில் திறந்து கிடந்தது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அருகே பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரம், நேற்று நள்ளிரவில் திறந்து கிடந்தது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அருகே பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் எஸ்பிஐ ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் இங்கு தங்களுக்கு தேவையான பணத்தை எடுத்து செல்வார்கள். இந்நிலையில், நேற்று இரவு ஏடிஎம் மையம் திறந்து இருந்தது. அப்போது, வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க உள்ளே சென்றார்.

அப்போது, பணம் வைக்கப்பட்டுள்ள பெட்டி திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், மோப்பநாயுடன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது, ஏடிஎம் மையத்தின் கதவு திறந்து இருந்தது. அதில் பணம் வைக்கப்பட்ட பெட்டி திறந்து கிடப்பது தெரிந்தது. 

இதைதொடர்ந்து அங்கு வந்த ஏடிஎம் பரமாரிப்பு நிறுவனத்தினர், இரவில் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்ப வந்த தங்களது நிறுவன ஊழியர்கள் இயந்திரத்தை சரியாக பூட்டி செல்லாததால், இயந்திரம் தானாகவே திறந்திருக்கலாம் என்றும், சாதாரணமாக அந்த இயந்திரத்தில் வேறு நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். தொடர்ந்து போலீசார், ஏடிஎம் மையம் திறந்து கிடந்தது மற்றும் அங்குள்ள கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஸ்கூல் டைம்ல தனியா கூட்டிட்டு போய் பள்ளி மாணவியிடம் சில்மிஷம்.. ஜெயிலில் ஆசிரியர் திடீர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?
நான்தான் உன்ன கல்யாணம் பண்ணிக்க போறேன்.. ஆசைவார்த்தை கூறி பலான போட்டோவை வாங்கிய இளைஞர்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி!