பிளஸ் 2 மாணவி பலாத்காரம்... கைதான இளைஞர்கள் பரபரப்பு வாக்குமூலம்!

Published : Nov 13, 2018, 02:35 PM IST
பிளஸ் 2 மாணவி பலாத்காரம்... கைதான இளைஞர்கள் பரபரப்பு வாக்குமூலம்!

சுருக்கம்

பிளஸ் 2 மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பரபரப்ப தகவல்கள் வாக்குமூலமாக அளித்ததாக தெரிகிறது.

பிளஸ் 2 மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பரபரப்ப தகவல்கள் வாக்குமூலமாக அளித்ததாக தெரிகிறது.

தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்தவர் புவனா (16). பெயர் மாற்றப்பட்டுள்ளது. கடந்த வாரம் மாணவி புவனா, பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழககுப்பதிவ செய்து, அதே ஊரை சேர்ந்த சதீஷ் (22) என்ற வாலிபரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், மாணவியை பலாத்காரம் செய்து, கொன்றதை ஒப்பு கொண்டாதாக வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் விசாரித்தனர். அதில் சதீஷுக்கும்,  மாணவிக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். தீபாவளிக்கு மாணவி ஊருக்கு வந்துள்ளார். 

அப்போது அவரை, சந்தித்த சதீஷ், மாணவியை அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அவருடன் சென்ற நண்பர் ரமேஷ் என்பவரும் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து சதீஷை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், மாணவி கொலை வழக்கில் தேடப்பட்ட ரமேஷ் (22), சேலம் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். இதைதொடர்ந்து போலீசார், ஓரிரு நாட்களில் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்னர். 

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போஸ்கோ சட்டத்தின் கீழ் முதலில் கோட்டப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். தற்போது போக்சோ சட்டப்பிரிவோடு, பாலியல் பலாத்காரம், கொலை ஆகிய பிரிவுகளும் சேர்க்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் தருமபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. வழக்கு மாற்றம் குறித்த சட்ட மாறுதல் அறிக்கையும் இந்த வழக்கை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரியான அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி தாக்கல் செய்து உள்ளார். 

குற்ற பத்திரிகையில் வழக்கு மாற்றம் தொடர்பான விவரங்கள் இடம்பெறும். இந்த வழக்கில் விரைவான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாணவியின் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ஸ்கூல் டைம்ல தனியா கூட்டிட்டு போய் பள்ளி மாணவியிடம் சில்மிஷம்.. ஜெயிலில் ஆசிரியர் திடீர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?
நான்தான் உன்ன கல்யாணம் பண்ணிக்க போறேன்.. ஆசைவார்த்தை கூறி பலான போட்டோவை வாங்கிய இளைஞர்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி!