லிவிங் டூகெதரில் இருந்தவர்களுக்கு இடையே தகராறு… கொடைக்கானலில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

By Narendran S  |  First Published Dec 2, 2022, 6:54 PM IST

கொடைக்கானலில் லிவிங் டூகெதரில் இருந்த ஜோடிகளுக்கு இடையே நள்ளிரவில் ஏற்பட்ட தகராறால் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


கொடைக்கானலில் லிவிங் டூகெதரில் இருந்த ஜோடிகளுக்கு இடையே நள்ளிரவில் ஏற்பட்ட தகராறால் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் சூர்யா. இவர் கொடைக்கானல் பூம்பாரை மலைக்கிராமத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றை ஒப்பந்தத்திற்கு எடுத்து நடத்தி வந்தார். இவருக்கும் இவரது விடுதி அருகே வசித்து வந்த சென்னையை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் லிவிங் டூகெதரில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சூர்யாவின் நடத்தை சரியில்லாததால் அவரை பிரிந்து சென்ற ஸ்வேதா சென்னைக்கு திரும்பினார்.

இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷ் போட்டோ காட்டி பேஸ்புக்கில் காதல் வலை வீசிய பெண்... வசமாக சிக்கிய இளைஞரிடம் ரூ.40 லட்சம் அபேஸ்

Tap to resize

Latest Videos

undefined

அதுமட்டுமின்றி சூர்யாவின் தொலைபேசி எண்ணையும் பிளாக் செய்துள்ளார். இதனை அடுத்து பூம்பாறை கிராமத்தில் இருந்த சூர்யா கொடைக்கானல் கல்லுக்குழி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் கொடைக்கானல் வந்த ஸ்வேதா, பம்பார்புரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வேலை தேடி வந்துள்ளார். மேலும் ஸ்வேதா சூர்யாவின் தொலைப்பேசி எண்ணை அன்பிளாக் செய்து வாட்ஸ் அப்பில் இருவரும் பேசியதோடு நேரிலும் சந்தித்துள்ளனர். அதன் தொடர்சியாக உணவுகள் மற்றும் தின்பண்டங்கள் வாங்கிக்கொண்டு சூர்யா தான் தங்கியிருக்கும் கல்லுக்குழி பகுதிக்கு ஸ்வேதாவை அழைத்து சென்றுள்ளார். இருவரும் உணவு உண்ட நிலையில் நள்ளிரவில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது.

இதையும் படிங்க: 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்.. வசமாக சிக்கிய 5 இளைஞர்கள்.. வீடியோ வெளியிட்டு கதறல்..!

இதை அடுத்து தன்னை அழைத்து செல்லும் படி ஸ்வேதா தனது ஆண் நண்பர்களுக்கு அழைத்ததன் பேரில் அங்கு வந்த அவரது நண்பர்கள் பிரச்சனை குறித்து விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து சூர்யா படுகாயம் அடைந்தார். இதை அடுத்து சூர்யாவை மீட்ட ஸ்வேதாவின் நண்பர்கள் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இதுக்குறித்து காவல்துறையிடமும் தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

click me!