டுவிட்டரில் 'பறையா' என பதிவிட்ட அண்ணாமலை.. PCR சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்.

Published : Jun 02, 2022, 01:30 PM IST
டுவிட்டரில் 'பறையா' என பதிவிட்ட அண்ணாமலை.. PCR சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்.

சுருக்கம்

தனது ட்விட்டர் பக்கத்தில் பறையா என்ற வார்த்தையை  பயன்படுத்திய பாஜக மாநில தலைவர்  அண்ணாமலையை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது . 

தனது ட்விட்டர் பக்கத்தில் பறையா என்ற வார்த்தையை  பயன்படுத்திய பாஜக மாநில தலைவர்  அண்ணாமலையை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

அதிமமுக தலைவர்  பசும்பொன் பாண்டியன் இந்த புகாரை கொடுத்துள்ளார். அதாவது பிரதமராக மோடி பதவியேற்ற எட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.  அதில் பறையரிலிருந்து விஷ்வ குருவாக உயர்ந்தவர் ( from a pariah to a viswaguru ) என அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார். பறையர் என்ற சொல்லை அவர் பயன்படுத்தியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இந்த கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் அ.தி.ம.மு.க  தலைவர் பசும்பொன் பாண்டியன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்ணாமலைக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். அதில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பேச்சாலும் பதிவுகலாலும் சாதி மத கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவர்களை சந்தித்த அதிமமுக  பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் தமிழகம் அமைதிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து தனது பிரச்சாரங்கள் மூலம் சாதி மத மோதல்களை தூண்டும் வகையில்  நடந்து வருகிறார். ஆதாரமற்ற பலகாரியங்களில் அண்ணாமலை தலையிடுவது வாடிக்கையாகிவிட்டது.

இதேபோல் மாணவி லாவண்யா உயிரிழத்த வழக்கிலும் அடிப்படை ஆதாரம் இல்லாமல் அண்ணாமலை சில தகவல்களை உண்மைக்கு புறம்பாக வெளியிட்டார். அவரின் அந்த வழக்கு தற்போது பிசுபிசுத்துப் போயுள்ளது. தமிழகத்தில் அண்ணாமலை தொடர்ந்து கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுகிறார். கடந்த 30ஆம் தேதி பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால சாதனையை வெளிப்படுத்தும் விதமாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் பறையா என்ற வார்த்தையை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் மனதை காயப்படுத்தி உள்ளார், மேலும் மனுதர்மத்தை பொறுத்தவரையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை இழிவுபடுத்தி பேசிவருகிறார். எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து, குண்டர் சட்டத்தில் கீழ் அவரை கைது செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

 

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!