மீண்டும் சென்னையில் இறங்கிய ஆந்திர கொள்ளையர்கள்...!! சுற்றிவளைத்து அள்ளியது போலீஸ்...!!

By Ezhilarasan BabuFirst Published Oct 2, 2019, 6:52 PM IST
Highlights

ஆந்திராவிலிருந்து அழைத்து வரப்படும் இளைஞர்களுக்கு தங்க இடம், உண்ண உணவு, இலவசமாக வழங்கி ஆறுமாத காலம்வரை பயிற்ச்சி கொடுப்பதுடன், பயிற்ச்சிக்குப் பின்னர் செல்போன் திருட்டில் ஈடுபடுத்தி வந்ததை அறிந்து போலீசார்  அதிர்ச்சி அடைந்தனர். 

இளைஞர்களுக்கு செல்போன் பறிப்பது குறித்து பயிற்சி கொடுத்த கும்பலை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர், மாத சம்பளம் கொடுத்து செல்போன் பறிப்பை ஊக்குவித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை யானைக் கவுனியில், சந்தேகத்திற்கிடமாக வகையில் சுற்றித் திரிந்த நபரை போலீசார் ரகசியமாக பின் தொடர்ந்ததில், அந்த நபர் சோழாவரத்தில் ஒரு வீட்டின் முன்பு நின்றதுடன், அங்கு வந்த மற்றொரு நபரிடம் தான் மறைத்துவைத்திருந்த சில செல்போன்களை எடுத்து கொடுத்தார்.  அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்ததுடன், அவர் தங்கியிருந்த வீட்டில் சோதனையிட்டனர், அப்போது அங்கு அதிக அளவில் தெலுங்கு நாளிதழ்கள் இருந்தது.  அது குறித்து போலீசார் தங்கள் பாணியில் விசாரித்ததில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த ரவி என்பவர் தலைமையில்  சுமார் 10க்கும் மேற்பட்டோர் வீடு வாடகைக்கு  எடுத்து தங்கி சென்னையில்  செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

ஆந்திராவிலிருந்து இளைஞர்களை அழைத்து வந்து  வீட்டில் தங்க வைத்ததுடன், சென்னையின்  கூட்ட நெரிசலில் எப்படி கொள்ளையடிப்பது என்பது குறித்து  பயிற்சி  கொடுத்து, செல்போன் திருட்டில் ஈடுபடுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. ஆந்திராவிலிருந்து அழைத்து வரப்படும் இளைஞர்களுக்கு தங்க இடம், உண்ண உணவு, இலவசமாக வழங்கி ஆறுமாத காலம்வரை பயிற்ச்சி கொடுப்பதுடன், பயிற்ச்சிக்குப் பின்னர் செல்போன் திருட்டில் ஈடுபடுத்தி வந்ததை அறிந்து போலீசார்  அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் செய்தித்தாள் படிப்பதுபோல் சென்று செல்போன் பறிப்பது இந்த  கும்பலின் ஸ்டைல், இப்படி சென்னையில் பட இடங்களில் இந்த கும்பல் கைவரிசை காட்டி பல நூறு செல்போன்களை பறித்ததுடன் அவைகளை ஆந்திராவில் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.   இந்நிலையில் செல்போன் திருட்டு கும்பல் தலைவன் ரவி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்து கும்பலையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

click me!