அவிநாசி அருகே மனதை உலுக்கிய கோர விபத்து.!! சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி.!!

Published : Mar 19, 2020, 08:09 AM ISTUpdated : Mar 19, 2020, 12:24 PM IST
அவிநாசி அருகே மனதை உலுக்கிய கோர விபத்து.!! சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி.!!

சுருக்கம்

திருப்பூர் அவிநாசி அருகே சிமெண்ட் லாரி, கார் மோதிக்கொண்ட விபத்தில், 5 கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  

T.Balamurukan

திருப்பூர் அவிநாசி அருகே சிமெண்ட் லாரி, கார் மோதிக்கொண்ட விபத்தில், 5 கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் விநாயகா மிஷன் குழுமத்திற்கு சொந்தமான பாரா மெடிக்கல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஏழு பேர், காரில் சேலத்தில் இருந்து உதகைக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பழங்கரை பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்த போது, சிமெண்ட் லாரி மீது மோதியது. இதில் கார் நொறுங்கியது.

இந்த விபத்தில், காரில் பயணம் செய்த மாணவர்களில் 5 பேர் மற்றும் கார் ஓட்டுனர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.இறந்தவர்கள் ராஜேஷ் (21) கள்ள குறிச்சி, சூர்யா (21) கள்ளகுறிச்சி, வெங்கட் (21) கள்ளகுறிச்சி, இளவரசன் (21) சின்னசேலம், வசந்த் (21) மற்றும் கார் டிரைவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

காயமடைந்த தருமபுரி சந்தோஷ் (22) அவிநாசி அரசு மருத்துவமனையிலும், கோவை கார்த்தி (21) கோவை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவிநாசி அருகே தொடர் விபத்து அரங்கேறி வருவதற்கான காரண்த்தை போலீஸார் ஆய்வு செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி