அமிர்தா பால் நிறுவனரிடம் ஆட்டையை போட்டவரை மடக்கி பிடித்த போலீஸ்!

By vinoth kumarFirst Published Aug 22, 2018, 12:44 PM IST
Highlights

ஈரோடு அமிர்தா பால் நிறுவன அதிபரிடம் ரூ.1 கோடி கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தப்பியோடிய கொள்ளையர்களுக்கு கார் ஓட்டிய சென்னை கொரட்டூரை சேர்ந்த ஜெயக்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு அமிர்தா பால் நிறுவன அதிபரிடம் ரூ.1 கோடி கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தப்பியோடிய கொள்ளையர்களுக்கு கார் ஓட்டிய சென்னை கொரட்டூரை சேர்ந்த ஜெயக்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக ஈரோட்டைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (55). இவர் சொந்தமாக அமிர்தா பால் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது நிறுவனத்தை மேலும் விரிவுப்படுத்த வங்கியில் கடன் வாங்க மோகனசுந்தரம் முயற்சி எடுத்து வந்தார்.

இந்நிலையில் அவரை காந்திலால், ராம்குமார் என்ற 2 நபர்கள் தொடர்பு கொண்டனர். தாங்கள் மிகப்பெரிய நிறுவனத்தை நடத்துவதாகவும் பல நிறுவனங்களுக்கு  கடன் வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எந்த சிக்கல்கள் இல்லாமல் கடன் பெற்று தருவதாகவும் கூறினர். காந்திலால், ராம்குமார் ஆகிய இருவரின் நடை, உடை, சொகுசுக் கார் என அவர்களின் ஒட்டுமொத்த செயல்களையும் பார்த்து மோகன சுந்தரம் நம்பிவிட்டார். 

பின்னர் அமிர்தா பால் நிறுவனர் மோகன சுந்தரிடம் ஆவணங்களைப் பெற்ற அவர்கள் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதாகவும் கூறியுள்ளனர். வங்கியில் ரூ.50 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி மோகனசுந்தரத்தை வரவழைத்துள்ளனர். ரூ.50 கோடி கடனுக்கு ரூ.1 கோடி கமிஷன் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ரூ.1 கோடி ரொக்கப்பணத்தை ஒரு சூட்கேஸில் எடுத்துக்கொண்டு அவர்கள் கூறிய விலாசத்துக்கு சென்றார். அவரை வாசலிலேயே வரவேற்று ரூமில் அமரவைத்து பூட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொள்ளை சம்பவம் தொடர்பாக தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!