நாட்டையே உலுக்கிய ஆலுவா சிறுமி கொலை வழக்கு... 26 நாட்களில் விசாரணை முடித்து குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

By vinoth kumar  |  First Published Nov 14, 2023, 11:57 AM IST

 சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெறித்து கொலை செய்து உடலை குப்பை தொட்டியில் வீசியது தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 


கேரளாவில் கடந்த ஜூலை மாதம் 5 வயது சிறுமி கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.  

பீகாரை சேர்ந்த தம்பதி கேரளா மாநிலம் ஆலுவா மாவட்டம் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வந்தனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை கடந்த ஜூலை 28-ம் தேதி திடீரென மாயமானார். இதனையடுத்து பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, சிறுமியை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். 

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்நிலையில், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சிறுமியை பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி அழைத்து செல்வதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெறித்து கொலை செய்து உடலை குப்பை தொட்டியில் வீசியது தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதையும் படிங்க;- உங்களுக்கு சரக்கடிக்கிறதுக்கு இடமே கிடைக்கலையா? கண்டித்த பேக்கரி உரிமையாளர் படுகொலை! மனைவி கண்முன்னே பயங்கரம்!

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி அஸ்பாக் ஆலமை கைது செய்தனர். அவர் மீது கொலை, கற்பழிப்பு, கற்பழிப்பு உள்ளிட்ட 16 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சம்பவம் நடந்து 30  நாட்களில் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் 800 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 26 நாட்களில் விசாரணை முடிக்கப்பட்டு 110வது நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அஸ்பாக் ஆலம் மீதான குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவரை குற்றவாளி என எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

இந்நிலையில் தற்போது தண்டனை விவரம் வெளியாகியுள்ளது. அதில், சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் அஸ்பாக் ஆலமுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

click me!