திருட்டு பைக்கில் முதல்வர் கான்வாயை முந்திய அஜித் .. பதறிய போலீசார் கொத்தா தூக்கிச் சென்று விசாரணை.

By Ezhilarasan BabuFirst Published Jun 2, 2022, 5:47 PM IST
Highlights

சென்னையில் முதலமைச்சர் கால்வாயை  முந்த முயன்ற இருசக்கர வாகன ஓட்டியை பிடித்து போலீசார் விசாரணை  நடத்தியதில் அதை திருட்டு வாகனம் என தெரியவந்துள்ளது. 

சென்னையில் முதலமைச்சர் கால்வாயை  முந்த முயன்ற இருசக்கர வாகன ஓட்டியை பிடித்து போலீசார் விசாரணை  நடத்தியதில் அதை திருட்டு வாகனம் என தெரியவந்துள்ளது. இது போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

தமிழக முதலமைச்சரின் கான்வாய்  என்பது போலீஸ் வாகனங்கள் புடை சூழ செல்லும் பாதுகாப்பு வளைய அமைப்பாகும். கான்வாய் வாகனத்தை யாரும் குறுக்கிடாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்வர். பல்வேறு பாதுகாப்பு யுக்தியுடன் காவலர்கள் வாகனங்கள் புடைசூழ செல்வதே கான்வாய் ஆகும். இந்நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று மத்தியம் தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்பட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது அவரது கார் நேப்பியர் பாலத்தை நெருங்கியபோது போலீசாரின் பாதுகாப்பு வாகனங்களையும் மீறி எதிர் சாலையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் முதல்வரின் கான்வாய் வாகனத்தை முந்த முயன்றார்.

அப்போது போலீசார் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர். அப்போது அந்த வாலிபர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அதுகுறித்து விசாரணை நடத்தினர், வாகன ஓட்டி வந்த நபர் சென்னை கேகே நகரை சேர்ந்த அஜித்குமார் என்பதும் அவர் ஓட்டி வந்த வாகனம் திருட்டு வாகனம் என்பதும் தெரியவந்தது. எம்ஜிஆர் நகரில் இருந்து வாகனத்தை திருடி கொண்டு வந்தபோது முதல்வர் கான்வாயை முந்த முயற்சித்து போலீசாரிடம் சிக்கினார். போலீசாரின் பிடியில் இருந்து தப்பித்து செல்லவே கான்வாயை முந்தியதாகவும் அந்த இளைஞர் கூறினார். இது குறித்து போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். கோட்டை காவல் நிலைய போலீசார் அஜித் குமாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் யாருடையது? அஜித் குமார் இரு சக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்பவரா? அல்லது இவரின் கூட்டாளிகள் யாரேனும் திருடி இவரிடம் கொடுத்தனரா? இவரின் பின்னணி என்ன என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதேபோல் இன்று கடையில் ஆழ்வார் பேட்டையில் முதல்வர் கான்வாய் வரும்போது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஒருவர் கான்வாயை முந்திச் செல்ல முயன்ற போது போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். இச்செயலில் ஈடுபட்ட இளைஞர் புரசைவாக்கத்தில் சேர்ந்த ஹிமாலய் மிஸ்ரா(24) என்பது தெரியவந்தது. இதனை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். ஒரே நாளில் இரண்டு வாகனங்கள் முதலமைச்சரின்  கான்வாயை முந்த முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் போலீசார் முதல்வரின் கான்வாய் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். 
 

click me!