திருச்சி மாவட்டம் வாழவந்தான்கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் கோபி(32). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுகவில் இணைந்தார்.
திருவெறும்பூர் அருகே அதிமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் வாழவந்தான்கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் கோபி(32). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுகவில் இணைந்தார். இவர் மீது காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
undefined
இதையும் படிங்க;- எனக்கு வயசு ஆச்சுன்னு! கழட்டி விட்டுட்டு வாலிபருடன் உல்லாசமாக இருந்ததால் கொன்றேன்!பாமக நிர்வாகி கொலையில் பகீர்
இந்நிலையில், நேற்று இரவு துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் உள்ள உணவகத்தில் வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கோபியை பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர். உயிர் பயத்தில் அவர்களிடம் தப்பிக்க முயன்ற போது அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில், கோபி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அங்கிருந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.
இதையும் படிங்க;- ஒரே நேரத்தில் 3 பேருடன் இயற்கைக்கு மாறாக உறவு இருக்க சொல்லி டார்ச்சர்! கதறிய மனைவி! எஸ்கேப்பான வயாகரா கணவர்.!
இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கோபியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.