எந்த நாளாக இருந்தாலும் விடமாட்டார்.. காப்பர்-டி போடவைத்தார்.. அடுக்கடுக்கான புகார்.. அலறும் நடிகை.!

By vinoth kumarFirst Published Jun 1, 2021, 6:39 PM IST
Highlights

முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் 3 முறை கருவுற்றேன். கட்டாயப்படுத்தி ஆபரேஷன் செய்ய வைத்தார் என நடிகை சாந்தினி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் 3 முறை கருவுற்றேன். கட்டாயப்படுத்தி ஆபரேஷன் செய்ய வைத்தார் என நடிகை சாந்தினி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை சாந்தினி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். அதில், என் மனைவி ரொம்ப கொடுமைக்காரி. அவரை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டு என்னை முறைப்படி திருமணம் செய்வதாக மணிகண்டன் சொன்னார். அதை நம்பி அவருடன் வாழ ஆரம்பித்தேன். என் வீட்டிற்கு அவர் வந்து தங்கி சென்றதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளது.

 அவரால் நான் 3 முறை கருவுற்றேன்.  கட்டாயப்படுத்தி ஆபரேஷன் செய்ய வைத்தார். ஆரம்ப காலகட்டங்களில் இப்போதைக்கு நாம குழந்தை பெத்துக்க வேணாம், அது அரசியல் ரீதியாக என்னுடைய வளர்ச்சியைக் கெடுக்கும்' என காப்பர்-டி பயன்படுத்த வைத்தார். கருத்தடை மாத்திரை உபயோகம் செய்ய வைத்தார். அதைவிடக் கொடுமை என்னவென்றால் அந்த மூன்று நாட்களில்கூட என்னை பலவந்தப்படுத்தி வலுக்கட்டாயமாக மிருகத்தனமாக உறவு வைத்துக் கொள்வர். கல்யாணம் செய்ய வற்புறுத்தியதால், கொலை மிரட்டல் விடுக்கிறார். அடித்து துன்புறுத்தினார் என்று சாந்தினி தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்த புகாரை மணிகண்டன் திட்டவட்டமாக மறுத்தார். அந்த பெண் யாரோன்றே தெரியாது.. போட்டோக்கள் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் வெளியே சொல்ல மாட்டோம் என்று ஒரு கும்பல் மிரட்டியது. முதலில் 3 கோடி கேட்டார்கள், அப்பறம் 2 கோடி, 30 லட்சம் என பேரம் பேசினார்கள்" என்று தெரிவித்திருந்தார்.ஆனாலும், சாஸ்திரி நகர் போலீசிலும் சாந்தினி புகார் அளித்தார். அதனடிப்படையில், மணிகண்டன் மீது போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில், அடையாறு மகளிர் போலீசிலும் நடிகை சாந்தினி நேரில் சென்று புகார் அளித்துள்ளார். அத்துடன், மணிகண்டன் தன்னை ஏமாற்றியது தொடர்பாக பரபரப்பான வாக்குமூலமும் அளித்துள்ளார். இதையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முறைப்படி சம்மன் அனுப்பப்படும் என்றும், அவரை நேரில் வரவழைத்து விரைவில் விசாரணை நடத்துவோம் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், அமைச்சர் மணிகண்டனின் இந்த நடவடிக்கைகளுக்கு பரணி என்பவரும் உடந்தையாக உள்ளார். எனவே 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை சாந்தினி கூறியிருந்தார். சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் 2017ல் வேலை செய்து வந்தபோதுதான் பரணி என்பவர் மூலமாக, மணிகண்டனுடன் சாந்தினிக்கு பழக்கம் ஏற்பட்டதாம். எனவே, பரணியையும் நேரில் அழைத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவர் அளிக்கும் தகவல்களையும் இந்த வழக்கில் போலீசார் முக்கிய ஆதாரங்களாக சேர்க்க உள்ளதாக தெரிகிறது. 

click me!