திருச்சி அருகே பயங்கர விபத்து !! நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் குழந்தைகள் உட்பட 8 பேர் பலி!!

Published : Sep 30, 2018, 07:02 AM ISTUpdated : Sep 30, 2018, 08:58 AM IST
திருச்சி அருகே பயங்கர விபத்து !!  நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் குழந்தைகள் உட்பட 8  பேர் பலி!!

சுருக்கம்

திருச்சி சமயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச் சாவடி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை மேடவாக்கம் விஜய், மஞ்சுநாதன் கந்த சாமி, பாலமுருகன் சுப்ரமணி, ஜெயலட்சுமி, பாக்கி லட்சுமி, கவிதா உட்பட 13பேர் பேட்ட வாய்த் தலை அருகே வீடு வாங்கியதை ஸ்கார்ப்பியோ காரில் பார்க்க வந்தனர். 22 டன் எடையுள்ள இரும்பு லோடு ஏற்றிக் கொண்டு ஆந்திர மாநிலம் நெல்லுரில் இருந்து வந்த லாரி, திருச்சி சமயபுரம் அருகே நெம்பர் 1 டோல்கேட் பகுதியில் இரும்பு லோடுடன் நின்று கொண்டிருந்தது. சென்னை மேடவாக்கத்தில் இருந்து வந்த கார் இன்று அதிகாலை 4.15 மணிக்கு மோதி விபத்துக்குள்ளானது.

சுமார் மூன்றரை மணி நேரம் மீட்பு பணி நடந்தது.அதிகாலையில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள், 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலகளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்துகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்த டோல்கேட் பகுதியில் இரவு நேரத்தில் விளக்குகள் எரிவதில்லை. மேலும், அதே பகுதியில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்துவதால் தான் லோடு வாகனங்கள் இந்த இடத்தில் நிறுத்தப்படுகின்றன. அதனால் தான் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. என்பது இப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு .கார் ஒட்டி வந்தவர் தூக்க கலக்கத்தில் வந்ததால் தான் விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

Babita Singh Reporting: ஒரு கொலை.. பல சந்தேகங்கள்! வீட்டுக்குள்ளேயே மறைந்திருக்கும் அதிர்ச்சி ரகசியம் – படம் எப்படி இருக்கு?
திருமணத் தடையை நீக்குவதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய ஜோதிடர்..! கோவையில் பரபரப்பு