மகளுக்கு மாதவிடாய் மாத்திரை!! மகனுக்கு கழுத்து நெரிப்பு... விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

Published : Sep 06, 2018, 10:52 AM ISTUpdated : Sep 09, 2018, 08:28 PM IST
மகளுக்கு மாதவிடாய் மாத்திரை!! மகனுக்கு கழுத்து நெரிப்பு... விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

சுருக்கம்

மாதவிடாய் மாத்திரை அதிக அளவில்  சாப்பிட்டால் உயிரிழப்பு ஏற்படும் என நினைத்து பாலில் அதை கலந்ததாக கூறியுள்ளார். ஆனால், மகள் மட்டுமே உயிரிழந்ததாகவும், கணவருக்கும், மகனுக்கும் தப்பித்ததாக  அடுத்தடுத்து நடந்த விசாரணையில் திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அபிராமி தொடர்பான செய்திகளை தனிநபர் செய்தி என்பதால் தொடர்ந்து பதிவு செய்வதில்  நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும், இது போன்று தடம் மாறுபவர்கள் மற்றும் மனக் குழப்பத்தில் இருப்பவர்களுக்கு இதை விழிப்புணர்வு செய்தியாக பார்க்கிறோம். பிறவியிலேயே யாரும் குற்றவாளிகளாக பிறப்பதில்லை, சரியான முடிவுகள் எடுக்கத் தெரியாமல் போவதே இதற்கு காரணம். 

பிரியாணிகாரனுடனான  காமக் காதலால் தனது இரண்டுக் குழந்தைகளையும் பாலில் விஷம் கலந்து கொலை செய்துவிட்டு தனது  ஆசை நாயகனுடன் வாழ கேரளாவிற்கு தப்பித்துச் சென்ற அபிராமியைக் கைது செய்ய போரூர் உதவி ஆணையர் தலைமையில் மூன்று ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை  அமைத்து நாகர்கோவிலில் கள்ளக் காதலனின் உதவியுடன் கைது செய்தனர். கைதான அபிராமியை  உடனடியாக  சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணைக்குப் பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

முதலில்,  பாலில் தூக்க மாத்திரை  இரண்டு குழந்தைகளையும் கொன்றதாக சொல்லப்பட்ட நிலையில், அபிராமியை கைது செய்து விசாரித்ததில்,   மகள் கார்னிகாவிற்கு மட்டும் மாதுக மாத்திரை கொடத்து கொன்றதாகவும். பாலில் கலந்த மாத்திரை வீரியம் குறைவாக இருந்ததால்  மகன் அஜயும் கணவர் விஜயும் உயிர் பிழைத்தனர். 

இதனையடுத்து கணவர் வேலைக்கு சென்ற பிறகு மகனை படுக்கை அறைக்கு அழைத்து சென்ற அபிராமி மூக்கு மற்றும் வாயை பொத்தி  கொன்றுள்ளார்.  கணவர் இரவு அலுவலகத்திலேயே தங்கியதால் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார். இதைத்தொடர்ந்து கேரளாவுக்கு தப்பி சென்ற அபிராமியை கள்ளக்காதலனை  வைத்து அபிராமியை வளைத்துப் பிடித்தனர்.

சென்னைக்கு அழைத்துவரப்பட்ட அபிராமி விசாரணைக்குப் பின் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு நடக்கும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்;  முதலில் குடும்பத்தினரை கொல்ல தூக்கமாத்திரை கொடுத்ததாக கூறிய அபிராமி தற்போது தான் கொடுத்தது தூக்கமாத்திரை அல்ல என அதிர்ச்சியூட்டும் தகவலை  கூறியுள்ளார். 

அப்போது, தான் பயன்படுத்தியது தூக்க மாத்திரைகள் இல்லை எனவும், தூக்க மாத்திரை வாங்கினால் ஈசியாக சிக்கிவிடுவோம் என்ற பயத்தில்  தனது காமக் காதலன் சுந்தரத்திடம் ஐடியா கேட்டு அவர் சொனதைப் போலவே  பெண்கள் பயன்படுத்தும் மாதவிடாய் மாத்திரைகள்  பயன்படுத்திக் கொன்றதாக  திடுக் தகவலைக் கூறியுள்ளார். மாதவிடாய் மாத்திரை அதிக அளவில்  சாப்பிட்டால் உயிரிழப்பு ஏற்படும் என நினைத்து பாலில் அதை கலந்ததாக கூறியுள்ளார். ஆனால், மகள் மட்டுமே உயிரிழந்ததாகவும், கணவருக்கும், மகனுக்கும் தப்பித்ததாக கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்