
பல பெண்களுடன் தகாத முறையில் பழகி, அவர்களை ஏமாற்றி, அவர்களிடமிருந்து பணம் பறித்து வந்த சிவகுமார் என்ற நபரை போட்டு தள்ளியுள்ளார் அவருடைய கள்ளக்காதலிகளில் ஒருவர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஈரோட்டில் வசித்து வருபவர் சிவகுமார் என்ற நபர். இவர் ஒரு பிரதான கட்சியில் மாநில இளைஞரணி செயலாளர் பொறுப்பில் உள்ளார். இவருடைய நடத்தையில் கடந்த சில மாதங்களாக பல மாற்றங்கள் இருப்பதை உணர்ந்த அவருடைய மனைவி, பல முறை சந்தேகத்தின் பேரில் சிவகுமாருடன் சண்டையிட்டு உள்ளார்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனியாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார் சிவகுமார். தனிமையில் வசித்து வந்த சிவகுமாருக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களிடமிருந்து பணம் பறித்தும் வந்துள்ளார். இவருடைய டார்ச்சலில் இருந்து தப்பித்துக்கொள்ள அவருடைய கள்ளகாதலிகளில் ஒருவர், பக்காவா திட்டம் போட்டு சிவகுமாரை கொலை செய்து உள்ளார்
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.